இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனானவர் நமது துதிகளையும் ஸ்தோத்திர பாடல்களையும் எப்பொழுதும் கேட்க விரும்புகிறார். நாம் அவரை அப்பா, பிதா மற்றும் சதா காலங்களுக்கும் மகிமையின் ராஜா என்று அழைப்பதைக் கேட்க அவர் விரும்புகிறார் . ஆனால் நாம் சேகரிக்கக்கூடிய எல்லாப் புகழை விடவும், தேவதூதர்களின் மிக உயர்ந்த சப்தங்களை விடவும் மேலான ஒன்று இன்னும் உயர்ந்தது: அது தேவனின் நாமம் , (yaweh) யாவே என்னும் எபிரெய வார்த்தை, நான் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர், உடன்படிக்கைகளின் தேவன் என்பதே (யாத்திராகமம் 3:13) -15). நம்முடைய மகிமையான தேவனின் நாமத்தை பரிசுத்தமாகப் போற்றவும், அதைக் கடைப்பிடிக்கவும் உறுதியளிப்போம் (யாத்திராகமம் 20:7; லேவியராகமம் 19:12), கர்த்தருடைய நாமத்தை ஒருபோதும் வீணிலே வழங்காமல் , பயபக்தியுடனும் கனத்துடனும் இருப்போமாக !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , இரக்கத்தின் தகப்பனே மற்றும் இவ்வுலகம் யாவையும் சிருஷ்டித்தவரே , நாங்கள் வாழ்கிற இவ்வுலகிலே உம் சித்தத்தை நடப்பிப்பதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். இப்போது, அன்பான ஆண்டவரே, உமது நாமம் மகிமைபடும்படி நான் உமக்காக வாழ முற்படுகையில், உமது சித்தத்தை என் வாழ்கையில் தெளிவாக வெளிப்படுத்துங்கள். இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.