இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனானவர் நம்மைப் தேடி வருவது மாத்திரமல்ல , அவர் நம்முடன் ஒரு மேலான உறவையும் வைத்துக்கொள்ள விரும்புகிறார் - நாம் அவரைத் தேடவேண்டும், அவருடைய சித்தத்தின்படியான முக்கியமான காரியங்களை செய்யவும், அதை எப்பொழுதும் தேடவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார் . நல்ல செயல்களைச் செய்வதன் மூலமும் அவருடைய மகிமையை நாம் சோர்ந்துப் போகாமல் தேடும்போதும், இவ்வுலகத்திற்குரிய காரியங்களை நாடாமல் நித்தியத்திற்குரிய மேன்மையான காரியங்களை தேடும்போதும், அவர் எப்பொழுதும் நமக்கு தேவையானதை உண்டாக்கி கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்: அதாவது அவருடன் நித்தியத்திற்குரிய மகிமையுள்ள வாழ்க்கை மற்றும் மற்றவர்கள் மீது நன்மைக்கேதுவான காரியங்களில் தாக்கத்தை உண்டுபண்ணுவது ஆகிய இவ்விரண்டு காரியங்களாகும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தம்மை நோக்கி பார்க்கிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பரலோகத்தினின்று தேவனானவர் எப்பொழுதும் பார்க்கிறார்!
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , நான் காணாமற்போய் பாவம் செய்தபோது என்னை நேசித்ததற்காக உமக்கு நன்றி. என்னை நேசிப்பது மட்டுமல்லாமல், உம்முடைய நேச குமாரனாகிய இயேசுவை அனுப்புவதன் மூலம் என்னைத் தேடியதற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி. உம்முடைய குமாரனாகிய இயேசுவுக்குள்ளாய் உம் கிருபையுடன் நீர் சந்தித்த உம் நீதிக்காக நன்றி. நான் சில சமயங்களில் உம்மை நோக்கி பார்க்காமல் , இம்மைக்குரிய விஷயங்களுக்காக வருத்தப்படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். நான் என் வாழ்க்கையை எப்படி நடத்துகிறேன் என்பதில் உமது மகிமையையும் கனத்தையும் தேடும்போது, என் இருதயத்தை ஒழுங்குபடுத்தவும், நித்திய விஷயங்களில் என் ஆசைகளை மையப்படுத்தவும் நான் முயல்வதால், தயவுக்கூர்ந்து அடியேனை ஆசீர்வதித்தருளும் . பிதாவே , நித்திய ஜீவனைக் கொண்டு என்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற உம்முடைய மேலான விருப்பம், நான் அதைத் தேடுவதை விட இன்னும் அதிகமாக உள்ளது என்பது எனக்கு வாக்களிக்கிறது . இயேசுவின் அருமையான நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.