இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுவிசேஷ ஊழியராக பவுல் உதவிகளை பெற்றுக்கொள்ள தனது எல்லா உரிமையும் இருந்தபோதிலும், கொரிந்தியர்களிடமிருந்து அவைகளை பெறாமல் இருக்க மிகவும் கவனமாக இருந்தார். மாறாக, அவர் அவர்களின் பிரச்சினைகளை முற்றிலுமாய் அறிந்திருந்ததினால், வெளிப்படையான மற்றும் உடனடி ஆசீர்வாதங்கள் இல்லாமல் இயேசுவுக்காக வாழ்வதற்கான சிறந்த முன்மாதிரியை அவர்களுக்குக் எடுத்து காண்பித்தார். பெரும்பாலும், மற்றவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கு முன், நம்முடைய நற்பண்புகளை நாம் முதலாவது காண்பிக்க வேண்டும். பவுலானவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் தேவைகளைப் படிப்பதிலும், ஒரு முன்மாதிரியாக வாழ்வதிலும் தேர்ச்சி பெற்றவர். பின்னர் அவர் கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றியது போல அவர்களும் தம் மாதிரியைப் பின்பற்றும்படி அழைத்தார் (1 கொரிந்தியர் 4:16, 11:1). தனது ஊழியத்திற்கு மற்றவர்களிடமிருந்து உதவிகளை பெறாததன் மூலம், அவர்கள் தங்கள் சொந்தக் கைகளால் சம்பாதித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் மற்றும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதை பவுல் அவர்களுக்குக் நிரூபித்து காட்டினார் (1 கொரிந்தியர் 4:12; 1 தெசலோனிக்கேயர் 4:11). பவுலின் மாதிரியைப் பின்பற்றி, மற்றவர்களுக்கு முன்பாக நேர்மையுடன் வாழ நம்மை நாமே ஒப்புக்கொடுப்போம் .

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனே மற்றும் சர்வவல்லமையுள்ள பிதாவே, தயவுக்கூர்ந்து எனது கொள்கைகளை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும் ஒரு நல்ல மாதிரியாகவும் வாழ தைரியத்தையும் நேர்மையையும் எனக்குத் தாரும். அன்பான பிதாவே , உமது மகிமைக்காக மற்றவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் வாழ்க்கையை எனக்கு ஆசீர்வாதமாய் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து