இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் மிகவும் நடைமுறையாய் பார்க்கிறேன் . எனவே, தேவன் உலகை அதன் பல்வேறு வண்ணங்கள், அநேக விதமான உயிரினங்களையும் மற்றும் வளமான நிலப்பரப்புகளுடன் எவ்வாறு உண்டாக்கினார் என்பதை பார்த்து வியந்து, அவரை துதிக்கிறேன் . பரலோகத்திலுள்ள நமது பிதா, நம்முடைய அனுதின தேவைகள் மற்றும் நித்திய கிருபையை நமக்கு நினைவூட்டுவதற்காக, நாம் வாழும் உலகில் உள்ள முக்கிய காரியங்களை பயன்படுத்தியதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வானவில்லின் அழகு என்பது அதன் அழகிய நிறங்களிலோ அல்லது அடிக்கடி வரும் மழையின் நறுமணத்திலோ மட்டுமல்ல, பெருவெள்ளத்திற்குப் பிறகு தேவன் நம்மோடும் நம் உலகத்தோடும் செய்த உடன்படிக்கையிலும் உள்ளது. நித்திய மற்றும் ஜீவனுள்ள தேவன் தம்முடைய அன்பு மற்றும் கிருபையின் காரணமாக நம் எதிகாலத்துடன் தன்னை இணைத்து, நம் உலகில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தேர்ந்தெடுத்தார். வானவில்லை அவருடைய அடையாளமாக கொண்டு, நமது கிரகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன் என்று தேவன் வாக்குறுதி அளித்தார். நாம் ஒவ்வொருவரும் கருவறையிலே உண்டாக்கப்பட்ட தேவனின் சிருஷ்டிப்பாய் இருக்கிறோம் , எனவே நாம் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள் (சங்கீதம் 138:13-16). ஆகவே,அடையாளமாக கொடுக்கப்பட்ட வானவில்லானது (ஆதியாகமம் 9:4-7) தேவனையும் அவருடைய உடன்படிக்கையையும் மதிக்க முற்படுகையில், இந்த உடன்படிக்கையை துன்மார்க்கத்துடன் அவமதிக்க மறுப்பதால், தேவனுக்கு ஒழுக்கமாகவும் பொறுப்புடனும் வாழ நாங்கள் உறுதியளிக்கிறோம் (ஆதியாகமம் 9:22-24). தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவூட்டுவதற்காக வானவில்லை உருவாக்கினார், மேலும் அவரை நம் குணாதிசயங்களால் கனப்படுத்தவும் , அவருடைய சிருஷ்டிப்புகளை பராமரிக்கவும் அழைக்கிறார்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , உம் மகா பெரிய வாக்குறுதிகளை எதிர்பார்க்கவோ அல்லது அதின் மேல் எங்களுக்கு உரிமை இல்லாதபோது, இன்னுமாய் அதை கோருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாதபோது அதை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி. உம் நிலையான மற்றும் கவனமான கவனிப்பை எனக்கு நினைவூட்டும் எனது அன்றாட உலகில் உள்ள விஷயங்களுடன் அந்த வாக்குறுதிகளை இணைத்ததற்காக நன்றி. உமது கிருபைக்கு பரிசுத்தத்திலும் கனத்தினாலும் பதிலளிக்க எனக்கு பெலத்தையும் ஞானத்தையும் அருளும்படி வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.