இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உடன்படிக்கைப் பெட்டியின் மூலம் தங்கள் மக்களுக்கு தேவனுடைய பிரசன்னத்தை மீட்டெடுத்த பிறகு, தாவீது மற்றும் ஆசாப், தேவனின் பெலத்தையும், பிரசன்னத்தையும் (முகத்தை ) தேடுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு எப்போதும் நினைவூட்டுவதற்காக இந்த வசனங்களை ஒரு பாடலாக மக்களுக்கு வழங்கினர்: *நம்முடைய பெலன் கர்த்தருடைய சமூகத்திலே காணப்படுகிறது (2 கொரிந்தியர் 12:8-10; எபேசியர் 6:10). *நம்முடைய கிருபையும் இரக்கமும் கர்த்தருடைய அன்பான சமூகத்திலிருந்து எப்பொழுதும் வருகிறது (ஏசாயா 63:7-9; 2 யோவான் 1:3). *நாம் அவரால் அறியப்பட்டாலும், கர்த்தரை அறிந்துகொள்வதிலும், அவருடைய சமூகத்தில் ஒரு நாளில் அவரை தரிசிப்போம் என்பதே நமது நம்பிக்கைக்கு மையமாக உள்ளது (1 யோவான் 3:1-2). தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தரையும் அவருடைய வல்லமையையும் நாடலாம். நமக்கான பாதையை உருவாக்க நமது சொந்த பெலத்தையும் ஞானத்தையும் மட்டுமே நம்ப வேண்டியதில்லை. கர்த்தருடைய கிருபையான மற்றும் வல்லமையுள்ள பிரசன்னத்தின் மீது நாம் சாய்ந்துகொண்டு அவருடைய முகத்தைத் தேடும்போது, ​​கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியை கொண்டு நம்மை வழிநடத்துகிறார், நம்முடைய எல்லா நன்மைக்காக அவர் நம் வாழ்வில் செயல்படும்போது நம்மை பெலப்படுத்துகிறார் (ரோமர் 8:12-17, 28-29).

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, என் தாயின் வயிற்றில் நீர் என்னை வடிவமைத்தபடியே, நீர் என்னை தனித்துவமாகப் படைத்தீர் என்பதை நான் அறிவேன் (சங்கீதம் 139:13-17). ஆயினும், நான் உம்மையும் உமது பெலத்தையும் முதலில் தேடாத வரையில் நான் கண்டுபிடிக்க விரும்பும் சுதந்திரத்தையோ ஞானத்தையோ என் வாழ்க்கையில் ஒருபோதும் கொண்டிருக்க முடியாது என்று நன்றாய் எனக்குத் தெரியும். நான் முழு மனதுடன் உம்முடைய முகத்தை தேடும் போது உமது மாறாத பிரசன்னத்தின் நிச்சயத்துடன் என்னை ஆசீர்வதித்து, உமக்கு மகிமையைக் கொண்டுவர ஆக்கப்பூர்வமான வழிகளில் என் திறமைகளைப் பயன்படுத்த உதவியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து