இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கோபம், மூர்க்கம் , ஏமாற்றம் மற்றும் சுயக்கட்டுப்பாடு இழப்பு ஆகியவை தேவனுடைய மிக முக்கியமான தலைவர்களில் பலரை மூழ்கடித்துள்ளன - அவர்கள் பார்த்த காரியம் தேவனுக்கு பயங்கரமானதாகவும் அவமரியாதையாகவும் இருந்தாலும் அப்படி செய்தனர் . ஒரு தலைவராக வழிநடத்தி செல்வது என்பது சில நேரங்களில் வேதனையான மற்றும் ஏமாற்றமளிக்கும் பணியாக கூட இருக்கலாம். ஆயினும், தேவன் மீது நம்பிக்கை நிறைந்த மற்றும் வலுவான தலைவர்கள் இல்லாமல் தேவனுடைய மக்கள் நிச்சயமாக அழிந்து போவார்கள். நமது தலைவர்கள் சிலர் தோல்வியடைந்தாலும், தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுப்பவர்களைச் ஆபத்துகள் சூழ்ந்திருந்தபோதிலும், தலைமைத்துவம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மேன்மையானது ! மோசேயோ யோசுவாவோ எசேக்கியாவோ தாவீதோ இல்லாவிட்டால் இஸ்ரவேல் மக்கள் எங்கே இருந்திருக்க கூடும் ...? எனவே கர்த்தர் உங்களை வழிநடத்த அழைக்கிறார் என்றால், அவருடைய அழைப்பை அலட்சியமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஆனால் தயவுசெய்து அவற்றை கருத்தாய் உண்மையாய் ஏற்றுக்கொள்ளுங்கள்! நீங்கள் ஒரு தலைவராக இல்லாவிட்டால், உங்களுடைய தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காகவும் அவர்களுடைய தலைமையின் மூலம் தேவனை கனப்படுத்த முற்படுகையில், தயவுக்கூர்ந்து அவர்களுக்காக ஜெபிக்க நினைவிலே கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:12-13; எபிரேயர் 13:7-8, 17).

என்னுடைய ஜெபம்

பரிசுத்த ஆண்டவரே, மிகுந்த நம்பிக்கை, தைரியம், சகிப்புத்தன்மை மற்றும் உத்தமம் ஆகிய குணங்களை கொண்ட தலைவர்களால் உம்முடைய திருச்சபையை ஆசீர்வதித்தருளும் . எங்களுடைய தலைவர்களுக்கு என் இருதயத்தைத் திறந்து, அவர்களை ஆசீர்வதிக்கவும் ஊக்குவிக்கவும் என்னைப் எடுத்துப் பயன்படுத்துங்கள். நீர் ஈவுகளை கொடுத்து உமக்கு ஊழியம் செய்ய நீர் அவர்களை அழைக்கும் போது அவர்கள் தைரியத்துடன் வழிநடத்த ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து