இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிறிது புளித்த மாவு பிசைந்தமா முழுவதையும் புள்ளிக்கப்பண்ணும்(1 கொரிந்தியர் 5:6). அதுபோலவே ஒரு பாவமுள்ள நபரும் அதே விளைவைக் கொண்டு வருவார்கள் , தேவனுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட மக்கள் உள்ள முழு குழுவிலும் ஒரு மிகச் சிறிய தீயக் காரியம் பெரிய விளைவை உண்டுபண்ணும் . எனவே நாம் ஞானமுள்ளவர்களாகவும், தேவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிவதன் மூலம் அவருக்குப் பயபக்தியுடன் இருப்போம். நம் வாழ்வில் பாவம் மற்றும் சோதனையை கையாளும் விதத்தில் நுண்ணறிவோடு இருப்போம். நாம் சாத்தானுடனே போரிடுகிறோம் என்பதையும் நினைவில் கொள்வோம் (எபேசியர் 6:10-12) மற்றும் சிறிய இடத்தை கூட சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் அனுமதிக்காதீர்கள். பிறகு, தேவனைத் துதிப்போம், ஏனென்றால் நம்முடைய இரட்சகர் நம் எதிரியை ஏற்கனவே தோற்கடித்துவிட்டார், மேலும் சாத்தானின் தாக்குதல்களை எதிர்த்து நிற்கவும், அவனது சோதனைகளை எதிர்த்து நிற்கவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அதிகாரம் அளிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , நான் உமது சத்தியத்திலே வாழவும், என் வாழ்வில் உமது குணத்தை வெளிப்படுத்தவும் முயலும் போது, ​​பிசாசின் சூழ்ச்சிகளின் வஞ்சகத்தைப் பார்க்க எனக்கு ஞானக் கண்களைத் தாரும். என்னிலும் என் வாழ்க்கையிலும் உம் வல்லமைக்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து