இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கிருபை நம்மை பாவம் மற்றும் மரணத்தின் சட்டத்திலிருந்து விடுவிக்கிறது. எவ்வாறாயினும், அந்த சுதந்திரத்தை எப்பொழுதும் நம் சுயநலத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது - எதிர்த்து நிற்க்கவும் அல்லது சுய திருப்திக்காக அல்ல. மாறாக, இயேசுவைப் போலவே நாம் நமது சுதந்திரத்தை மீட்புக்காக பயன்படுத்த வேண்டும் (பிலிப்பியர் 2:5-11). பாவத்தின் அடிமைத்தனத்திலும் தேவனை பற்றிய தவறான எண்ணங்களிலும் இன்னும் சிக்கியிருக்கும் மற்றவர்களுக்கு உதவ அந்த சுதந்திரத்தை நாம் தானாக முன்வந்து உபயோகிக்கலாம் . கிறிஸ்துவைப் போல மறுரூபமாவதற்க்கு நாம் பரிசுத்த ஆவியின் சுதந்திரத்தைப் பயன்படுத்தலாம் (2 கொரிந்தியர் 3:17-18). இயேசுவை அறியாதவர்களில் சிலரை கர்த்தருக்கும் அவருடைய கிருபைக்கும் நாம் உண்மையாக நம்மை முழுமையாக சமர்ப்பிக்கலாம் (1 கொரிந்தியர் 9:20-23). மகிழ்வதற்கும், மீட்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் நமது சுதந்திரத்தைப் எப்பொழுதும் பயன்படுத்த ஆயத்தமாய் இருப்போம் .
என்னுடைய ஜெபம்
மகாபெரிய மற்றும் வல்லமையுள்ள ஆண்டவரே, உமது கிருபையினால் என்னை விடுவித்ததற்காக நன்றி. அன்புள்ள பிதாவே , இந்த ஈவை நீர் எனக்கு தருவதற்கு மிகப் பெரிய விலையை கொடுத்தீர் என்பதை நான் அறிவேன் - உம்முடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்துவின் அவமானகரமான சித்திரவதை, மரணம் மற்றும் அடக்கம் ஆகிய காரியங்கள் அந்த விலை என்று அறிவேன் . ஆனால் நீர் அவரை மரணத்திலிருந்து ஜெயமாக எழுப்பினீர்கள்! ஆகவே, அன்பான பிதாவே , இன்னும் இயேசுவில் தங்கள் விடுதலையையும் சுதந்திரத்தையும் காணாத மற்றவர்களை ஆசீர்வதிக்க என்னை எடுத்துப் பயன்படுத்தியருளும் , இதனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை இயேசுவோடு வெற்றிகரமான புதிய வாழ்க்கைக்கு உயர்த்த முடியும். என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே இவைகளை கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.