இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் எப்படியாகிலும் தேவனை தேட வேண்டுமென்று அவர் ஏங்குகிறார் ! தேவனானவர் அவருடைய அடையாளங்களை இவ்வுலகம் முழுவதும் பதித்துள்ளார், மேலும் ஜீவனுள்ள வாழ்க்கையைத் தேடி கண்டுபிடிக்கவும் அந்த வாழ்க்கையின் அடிச்சுவடுகளை தொடர்ந்து பற்றி கொள்ளும்படியான ஸ்தலங்களையும் நமக்குக் கொடுத்தார். இந்தத் திட்டத்திற்காக அவருக்கு ஒரு நோக்கம் இருந்தது: தேவனானவர் நாம் அவரைத் தேட வேண்டும் என்று விரும்பினார், எல்லா சிருஷ்டிப்பிற்கும் காரணமாய் இருப்பவர் அவரே . தேவன் நமக்கு தூரமானவரல்ல என்றாலும், அவர் நம்மால் தேடப்பட்டு கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று எப்பொழுதும் ஏங்குகிறார். நாம் ஒவ்வொருவரும் தேவனைத் தேடும்போது, ​​அவர் நம்மை ஸ்தோத்திரிப்பது மட்டுமல்லாமல், நம் வாழ்க்கையின் மிகவும் முக்கியமான நோக்கங்களில் ஒன்றை நிறைவேற்றி வாழ்கிறோம்!

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே , உம்மை இன்னும் முழுமையாக அறிந்துகொள்ள நான் ஏங்குகிறேன் அன்புள்ள தேவனே , எனது அனுதின வாழ்வில் உம்முடைய மாறாத சமூகத்தை அடியேன் அறியும்படி என் மனக் கண்களை திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் உம்மால் அறியப்பட்டதைப் போலவே, அடியேனும் உண்மையிலேயே உம்மை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இவை யாவற்றையும் என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து