இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"ஜெப தூபங்கள் மேலே செல்கிறது , ஆசீர்வாதங்கள் கீழே பொழிகிறது ..." இந்த சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளியின் பாடலின் வார்த்தைகள் பாதி மட்டுமே சரி, ஏனென்றால் நாம் ஜெபிக்காதபோதும் தேவன் அநேக நேரங்களில் தமது ஆசீர்வாதங்களை பொழிகிறார் . ஆனால் வறண்ட நிலத்தை நனைக்கும் மழையினால் வரும் சுகந்த மண்ணின் வாசனையை நாம் விரும்புவது போல, தேவன் தம்முடைய பிள்ளைகளின் மகிழ்ச்சியின் நறுமணத்தை விரும்புகிறார், குறிப்பாக அவர்களுடைய மகிழ்ச்சியின் உறைவிடமாக அவர் ( தேவனானவர் )இருக்கும்போது!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, சாந்தமுள்ள பிதாவே , நீரே என் மகா பெரிதான மகிழ்ச்சி. மற்ற அனைவரும் தோல்வியுறும் போதும் , சதாகாலங்களிலும் நீர் ஒருவரே தேவனாய் இருக்கிறீர் . நீரே என் கன்மலையும் என் கோட்டையும், என் நல்ல மேய்ப்பரும் , அசைக்க முடியாத மற்றும் பெயர்க்க முடியாத என் நம்பிக்கையான கன்மலையுமாயிருக்கிறீர் . உம்முடைய அளவற்ற ஆசீர்வாதமும், கிருபையும் என் மேல் பொழிந்து என்னை மகிழ்ச்சியினால் நிரப்பும். நான் உம்மை முகமுகமாய் பார்க்கவும், உம் சமூகத்தில் என்றென்றும் மகிழ்ச்சியடையவும் படியான அந்த நாளுக்காக அடியேன் ஆவலாயிருக்கிறேன் . அதுவரை,அந்த நாளை எதிர்பார்த்து மகிழ்வேன். இயேசுவின் மகிமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து