இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தையை தனக்குத்தானே சொன்ன பெண், யூத சட்டத்தின்படி தன்னைத் தீட்டுப்படுத்தின நோயினால் பன்னிரெண்டு வருடங்களாகப் போராட்டத்தின் காரணமாக ஒதுக்கிவைப்பு மற்றும் தனிமை ஆகியவற்றை சந்தித்தாள் . அவளுடைய அந்த நிலை அவள் வெளியே போகமுடியாமல் அவளைச் சிறைப்படுத்தியது மற்றும் அவளுடைய வாழ்க்கையை சமூக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மத ரீதியாகவும் கிட்டத்தட்ட வாழ முடியாததாக ஆக்கியது. இயேசு அவளை அவளது சிறையிலிருந்து விடுவித்தது போல ( வசனம் 22ல் ), அப்படியே உன்னுடைய சிறையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி அவர் ஏங்குகிறார் . எந்த காரியம் உன்னை சிறைபிடித்து வைத்திருக்கிறது? குறைந்தபட்சம் ஐந்து ஈவுகளின் மூலமாய் உங்களுக்கு விடுதலை கொடுக்க இயேசுவானவர் ஏங்குகிறார்: 1.தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளவும், பொல்லாப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தேவனுடைய வார்த்தை உதவுகிறது. 2. நீங்கள் அவருடைய வார்த்தைக்கு முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்து வாழும்போது, நீங்கள் அவரை வழிநடத்த அனுமதிக்கிறீர்கள். 3. பாவம், குற்ற உணர்வு மற்றும் அவமானத்திலிருந்து உங்களை சுத்திகரிப்பதாகும் 4. பரிசுத்த ஆவியின் ஈவு , உங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பாவத்தை ஜெயிக்கவும், இயேசுவைப் போல ஆகவும் உதவும். உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும். 5. அவருடைய சகோதர சகோதரிகள் குடும்பம் ஊக்கப்படுத்துவதற்கும், உங்களுக்கு உதவுவதற்கும், அவருக்கான உங்களுடைய ஒப்புவிப்புக்கு நீங்கள் பொறுப்புக் கூறுவதற்கும் . விடுதலைக்கான தேவனின் விலையேறப்பெற்ற திறவுகோல்களில் இவை ஐந்து காரியமாகும் . எனவே, அன்பான நண்பரே, உங்கள் இருதயத்தில், "அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு " அவரை அணுகி, அவரை உங்கள் இரட்சகராக ஒப்புக்கொண்டு, அவரை உங்கள் ஆண்டவராக கனம்பண்ணுங்கள் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , சாத்தான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவன் பிடியில் இருக்கிறவர்கள் அவனுடைய பிடியில் இருந்து விடுபட வேண்டிய அனைவருக்காகவும் நான் இன்று ஜெபிக்கிறேன். எல்லா சிருஷ்டிப்பிற்கும் ஆண்டவரே , எங்களுடைய ஒவ்வொரு வாசகர்களையும் தீயவனிடம் சிறைபிடித்து வைத்திருக்கும் பிணைப்பை உடைக்க வேண்டும் என்று கேட்கிறேன், இயேசுவின் வல்லமையும் பரிசுத்தமுமான நாமத்தினாலே நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து