இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த வார்த்தைகள் முதன் முதலாக பேசப்பட்டபோது, தீர்க்கதரிசியும் அவருடைய ஜனங்ளும், யூதேயாவில் உள்ள தங்கள் இடத்திற்கு இஸ்ரவேலர் எப்படி திரும்புவார்கள் , உலகில் உள்ள மற்ற இராஜ்ஜியங்களில் அவர்களின் முக்கியத்துவம், அன்றாட வாழ்க்கையில் அவர்களின் அழகு, கர்த்தருடைய தேவாலயத்தில் அவர்களின் தொழுகை மற்றும் பாதுகாப்பு ஆகிய காரியங்களை தேவனானவர் எப்படி மீட்டெடுப்பார் என்று நோக்கி பார்த்தனர் . நம்முடைய பார்வையில் இருந்து இதை பார்த்தால், இந்த ஜெபமானது நம் விண்ணப்பமாகவும் கூட இருக்கலாம். திருப்பிக்கொள்ளுதல் என்பது கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கும், இது நம்மை தேவனிடம் கொண்டு சேர்க்கிறது . அந்த நாளில், தேவனுக்கும் நமக்கும் இடையில் நடு சுவராக நிற்கும் ஒவ்வொரு தடையும் கீழே விழும். அந்த ஜெயத்தினால் நம்முடைய மரணம் விழுங்கப்படும். நாம் தேவனை முகமுகமாய் பார்ப்போம், அவருடைய பரிபூரண பிள்ளையாக வெளிச்சத்திலே அவருடன் கூட நடப்போம். மாரநாதா ( MARANATHA )— ஆண்டவரே வாரும் (1கொரிந்தியர் 16:22-24 ). அந்த நாள் விரைவில் வரட்டும்!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், அற்புதமுமான தேவனே , உம்முடைய பரிபூரணத்திற்கும், என்னுடைய வரம்புகளுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய இடைவெளி உண்டு என்பதை நான் அறிவேன். ஆனாலும், அன்பான பிதாவே , உமது கிருபையினால் நீர் அந்த பெரிய இடைவெளியை கடந்துவிட்டீர் என்று நான் நம்புகிறேன். அந்த பரிபூரணம் அதன் மகிமையிலே வெளிப்படும் நாள் வரைக்கும் நான் காத்திருக்கையில், சாத்தானுடனான எனது போர்களுக்கு என்னை பெலப்படுத்துங்கள் மற்றும் பொல்லாத ஆவியினால் உண்டாகும் அனைத்து தீங்கிலிருந்தும், தாக்குதல்களிலிருந்தும் என்னை விடுவித்தருளும் . நான் உம்மை முகமுகமாய் பார்க்கும் நாள் வரை, அடியேனை காப்பாற்ற நீர் இம்மட்டுமாய் செய்த மற்றும் செய்ய போகிற யாவற்றிற்காகவும் என் மனமார்ந்த நன்றிகளையும், ஸ்தோத்திரங்களையும் தெரிவிக்கிறேன், ஏற்றுக்கொள்ளும் பிதாவே . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் மகிழ்ச்சியுடன் ஜெபிக்கிறேன் . ஆமென்.