இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கிறிஸ்துவானவர் பரலோகத்தை விட்டு இறங்கி , நம்மில் ஒருவரானார், நம்மிடமிருந்து மோசமானதை சகித்து ஏற்றுக்கொண்டு , நம்மை இரட்சிக்கவும் ஊழியம் செய்யவும் வந்தார் . யூதர்கள் மற்றும் புறஜாதிகள் அனைவரோடும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள பவுல் எல்லாவற்றையும் தியாகம் செய்தார், மேலும் அதினால் சிலரை மீட்க முடிந்தது. நாம் என்ன செய்தோம்... எதை விட்டு கொடுத்தோம் ... எதை விட்டுவிட்டோம்... எதைச் சகித்துக் கொண்டோம்... நாம் நேசிக்கிறவர்களோ, அறிந்தவர்களோ, அல்லது நாம் கூறும் வார்த்தைக்கு மதிப்பு செலுத்துகிறவர்களுக்கு , இயேசுவைப் பகிர்ந்துகொள்ளும் சிறந்த மனிதராக மாற நாம் என்ன செய்தோம். ? அதிலும், காணாமற் போனவர்களையும், நமக்குத் தெரியாதவர்களையும், நம்மைப் போல் தேவனை அறியாதவர்களையும் சந்திக்க நாம் என்ன செய்தோம், அதனால் அவர்கள் இயேசுவைப் பின்பற்ற முடியும்? பவுலின் மாதிரியையும், இயேசுவை அவருடைய மாதிரியாக அவர் விவரித்ததையும் பின்பற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வோம்: ஒருவருக்கொருவர் உங்கள் உறவுகளில், கிறிஸ்து இயேசுவைப் போன்ற அதே மனநிலையைக் கொண்டிருங்கள்: கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலிப்பியர் 2:5-8).
என்னுடைய ஜெபம்
இரக்கமுள்ள பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே , நிலையான அன்பில் மிகுந்த ஐசுவரியமுள்ளவரே , என்னைச் சுற்றியுள்ள இயேசுவைத் தேவைப்படுபவர்களைப் பார்க்க எனக்கு நல்ல மனக்கண்களைத் தாரும் , அவருடைய கிருபையை பகிர்ந்து கொள்ளும் தைரியத்தையும் பணிவையும் எனக்கு வலுவூட்டுங்கள், மேலும் அவருடைய அன்பை அறிய அவர்கள் தயாராக இருக்கும்போது அவர்களுடன் இயேசுவைப் பகிர்ந்து கொள்ள அந்த சரியான சந்தர்ப்பத்தினை பிரயோகிக்க எனக்கு ஞானத்தை தாரும் . முடிந்தவரை பலரை கிறிஸ்துவுக்குள் கொண்டுவர நான் எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன், குறிப்பாக இயேசுவை அறிந்துகொள்ள ஆயத்தமுள்ள இருதயம் உள்ளவர்களுக்கு பகிர விரும்புகிறேன் . அவருடைய நாமத்தினாலே , ஜெபம் செய்கிறேன். ஆமென்.