இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
விரக்தியடைந்த ஒரு தகப்பன் உதவிக்காக இயேசுவிடம் வந்து, உங்களால் கூடுமானால் , இயேசுவே, தயவுசெய்து உதவுங்கள்! கூடுமானால்? கூடுமானால்! விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று நம்பிக்கையற்ற தகப்பனிடம் இயேசு கூறினார். பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவை நாம் நேசித்து, நம்முடைய வாழ்க்கையில் அவருடைய நோக்கங்களைப் பின்பற்றும்போது, நம்முடைய சிறந்த நித்திய நன்மைக்காகவும், தேவையிலுள்ள நம்முடைய அன்புக்குரியவர்களின் நித்திய நன்மைக்காகவும் அவர் செயல்படுவார் என்று நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிறோம் (ரோமர் 8:28). நாங்கள் நம்புகிறோம் என்று சொல்கிறோம், எனவே சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களை போல அர்ப்பணிப்புடன் விசுவாசத்துடன் கேட்போம். இந்த மூன்று நண்பர்களும் தேவன் தங்களை அக்கினி சூளையிலிருந்து காப்பாற்ற முடியும் என்று நம்பினர் மற்றும் நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் நம்பிக்கையுடன் சொன்னார்கள், "நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்!" (தானியேல் 3:16-18) நாம் விசுவாசிக்கும்போது இயேசுவுக்குள் நமக்கு என்ன சாத்தியம் என்ற மகத்தான தன்மைக்கு அர்ப்பணிப்போம்!
என்னுடைய ஜெபம்
நாம் நினைப்பதற்கும் அல்லது கேட்பதற்கும் மிகவும் அதிகமாகவும் கிரியை செய்ய முடியும் என்று நாங்கள் விசுவாசிக்கும் எங்கள் தேவனுக்கு , இப்போதும் yஎப்பொழுதும் சதாகாலங்ககளிலும் மகிமைமையும், மாட்சிமையும்,கனமும், வல்லமையும் உண்டாவதாக . இயேசுவின் மகிமையான நாமத்தில், நாங்கள் உம்மைப் போற்றி துதித்து ஜெபிக்கிறோம்,ஆமென்.