இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எரேமியாவின் இந்தப் வசனப் பகுதி, தேவனுடைய தன்மையைப் பற்றிய இரண்டு சத்தியத்தை அவருடைய மக்களுக்கு நினைப்பூட்டியது - நம் வாழ்விலும் இந்த சத்தியத்தை வெளிக்காண்பிக்க வேண்டும் : 1. தேவனானவர் கிருபை , நீதி மற்றும் நியாயத்தை வெளிப்படுத்துகிறார். 2. அவருடைய குணாதிசயங்களின் இந்த காரியங்களை நம்மில் ஜீவனுள்ளதாய் காணும்போது தேவன் அதில் மகிழ்ச்சியடைகிறார். தயவு, நீதி மற்றும் நியாயத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி ஒப்புவித்து நடப்போமானால் அப்பொழுது நாம் பரலோகத்தின் பிதாவைப் போல இருப்போம். ஏன்? ஏனென்றால், ஒவ்வொரு நாளும் நாம் எப்படி வாழ்கிறோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களை நடத்துகிறோம் என்பதில் பிதாவைப் போலவே மறுருபமாவதினால் அவரைப் பிரியப்படுத்துவதை விட பெரிய மகிழ்ச்சி நமக்கு இருக்கமுடியாது !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமான தேவனே , என் வாழ்க்கை உம்மை மகிழ்வித்து உமக்கு சந்தோஷத்தை கொண்டுவரட்டும் . இருப்பினும், உம் கிருபை , நீதி மற்றும் நியாயம் ஆகிய காரியத்தில் உம்முடைய அளவை விட எனது குணம் மிகவும் குறைவாக இருப்பதை நான் அறிவேன் - இந்த குணங்களை நீர் பல நூற்றாண்டுகளாக வெளிப்படுத்தினீர். எனவே, இயேசுவின் மூலமாய் காண்பிக்கப்பட்ட உம் எல்லா நற்பன்புகளையும் இன்னும் சீரான முறையில் வாழ்வதன் மூலமாய் நான் உம்மைப் பிரியப்படுத்தவும் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் முயல்வதால், தயவுக்கூர்ந்து எனக்கு இந்த காரியத்தில் உதவியாயிரும் . பரிசுத்த ஆவியானவரை எனக்குத் தந்ததற்காக நன்றி, அவர் என்னைப் இன்னும் அதிகமாய் என் ஆண்டவரைப் போல மாற்றுகிறார், அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து