இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் பாவத்தை வெறுக்கிறார். இல்லையா? எனக்கு நன்றாக தெரியும். ஆனால் மீண்டும் மீண்டும் அதே வலைகளில் சிக்கி நாம் எப்படி இடறி விழுகிறோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. இங்குதான் யோவான் , அவர் ஒரு மென்மையான ஆசிரியராக இருந்தபோதும் , தலையில் ஆணி அடித்தார் போல ஒரு காரியத்தை குறிப்பிடுகிறார். நம்முடைய குறிக்கோள் ஒரே ஒரு பாவத்தை கூட செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஆனால், மாம்சத்திற்கு எதிரான நமது போராட்டத்தை அறிந்த யோவான் ஆசிரியர் , உண்மையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள வாழ்க்கையை வாழ முயற்சிப்பவர்களுக்கு உறுதியளிக்கிறார். நாம் பாவம் செய்யும்போது, ​​நம்முடைய பாவங்களுக்கான பலியை , தேவனின் குமாரன், அவருடைய இரத்தத்தால் கழுவி, நம்மைப் பாவமற்றவர்கள் என்று அறிவிக்கும் எங்கள் நியாயாதிபதி என்பதை அவர் அறிய விரும்புகிறார்! எனவே கிறிஸ்துவிடம் நெருங்கி வருவோம். ஒவ்வொரு காலையிலும் நம்முடைய நாளைத் தொடங்கும்போது அவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவருடைய வல்லமையையும் , கிருபையையும் நம்பி பற்றிக்கொண்டு , நம்மைத் தாங்கிச் செல்வோம். அப்படியாய் நாம் செய்ய முற்படும்போது , ​​அவர் நமக்குள்ளாய் கிரியை நடப்பிப்பார் !

என்னுடைய ஜெபம்

தேவனே , உம்மைப் போல் எவரும் இல்லை, எதுவும் இல்லை. என்னுடைய பாவங்களுக்காக நான் வேறொரு பலி கொடுக்க வேண்டியதில்லை. என் பாவங்கள் உம் இருதயத்தை உடைத்தாலும், நீர் அந்த பலியை எனக்காக கொடுத்தீர் . உமது கிருபைக்கு நன்றி சொல்ல முயலும்போது, ​​நான் என்னையும், என் வாழ்க்கையையும், என் எதிர்காலத்தையும் உமக்கு ஒரு ஜீவனுள்ள பலியாகவும் , பரிசுத்தமாகவும், மகிழ்ச்சியாகவும் கொடுக்க முயலும்போது, ​​தயவுகூர்ந்து இன்று என்னை எடுத்து பயன்படுத்துங்கள். இயேசுவின் மூலமாய் , அவருடைய நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து