இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நெகேமியா முடியாத காரியமாகத் தோன்றியதை எதிர்கொண்டார். இருப்பினும், தேவனுடைய மக்கள் தங்கள் தேவன் எவ்வளவு பெரியவர் என்பதை நினைவில் கொள்வது எத்தனை முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார்! முன்னே நாம் , யாவருக்காகவும் மற்றும் எல்லாவற்றிற்காகவும் மிகவும் பொருத்தமற்ற பாராட்டை அல்லது துதியை செலுத்தினோம் . எவ்வாறாயினும், அந்தப் புகழ்ச்சி நமக்கு முக்கியமானது, நமக்கு நெருக்கமானவர்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக , அது தேவனுக்கு மிகவும் முக்கியமானது. இந்த அண்டசராசரத்திலே நெகேமியாவை விட எவரும் இத்தனை அதிகமாய் கற்பனை செய்யத் துணிந்திருக்க முடியாது, நம்முடைய எளிய பேச்சு மற்றும் துதி அல்லது ஸ்தோத்திர பாடல் என்ன?வானத்திலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், மகத்தான கடல்களில் வாழும் ஆயிரமாயிரம் உயிரினங்கள் யாவும் நம்மை உண்டாக்கினவர் பரலோகத்தின் தேவன் என்று கூறி எப்பொழுதும் துதிக்கிறது . தேவதூதர்கள் மற்றும் வான சேனைகள் யாவும் அவரை எப்பொழுதும் பணிந்து கொள்ளுகிறது.எனவே, நாம் தேவனை துதிப்பது என்ன வித்தியாசத்தை இவைகளிடமிருந்து காண்பிக்கிறது ? இந்த அண்டசராசரத்திற்கும் அதில் வாழும் ஜீவன்களுக்கும் , அது ஒரு பொருட்டல்ல. ஆனால் அது நமக்கு நன்மை உண்டாக்குகிறது ! துதிப்பதினால் நமக்கு நம்பமுடியாத பெலனை கொடுக்கிறது , இன்னுமாய் தேவனிடம் நம்மை கிட்டிச் சேர செய்கிறது . வியக்கத்தக்க வகையில், அவர் நம் பிதாவாக இருந்து , நம் மூலமாக இவ்வுலகில் அவருடைய அற்புதங்களைச் செய்ய விரும்பும் நம் ஆண்டவருக்கு நம்முடைய துதியும் ஸ்தோத்திரமும் மிகவும் முக்கியமானது அல்லவா !
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமான மற்றும் அற்புதமுள்ள தேவனே , நீர் மாத்திரமே வானத்திற்கும் பூமிக்கும் தேவனானவர் - எல்லா சிருஷ்டிப்பின் தேவனே மற்றும் என் வாழ்க்கை ஜீவியத்தின்நாயகனே . நீர் உண்டாக்கின யாவும் உம்மை போற்றி துதிக்கின்றன . நீர் சிருஷ்டித்த யாவும் உம்மை சிருஷ்டிப்பில் வல்லவரும், அன்பும் இரக்கம் நிறைந்தவரும் என்று கூறி துதிக்கிறது . பிதாவே , நீர் உண்டாகின சிருஷ்டிப்பின் போற்றுதலோடும், தூதர்களின் துதியோடும் , இன்னுமாய் எனக்கு முன்பாக இவ்வுலகத்தை விட்டு பிரிந்த பலரின் ஸ்தோத்திரத்தோடும் சேர்ந்து என் மனமார்ந்த துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்த விரும்புகிறேன். நீர் மெய்யாகவே துதிக்கு பாத்திரர். அந்த முடிவில்லாத பாராட்டுக் குழுவின் ஒரு பகுதியாக எனது வார்த்தைகளையும் , ஸ்தோத்திரங்களையும் , செயல்களையும், இருதயத்தையும் மற்றும் என் வாழ்க்கை முழுவதையும் நான் மகிழ்ச்சியுடன் ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.