இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு பிள்ளை கேட்கக்கூடிய சில கடினமான வார்த்தைகள் இவை: "உன்னை குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்." நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு தம்முடைய மகிமையில் வரும்போது நாம் அவருக்கு முன்பாக நிற்கும்போது, ​​"நான் உன்னைக் குறித்து வெட்கப்படுகிறேன்!" என்ற வார்த்தையை நாம் கேட்க விரும்பவில்லை. நாம் இயேசுவை நம் ஆண்டவராக நேசிக்கிறோம், கனப்படுத்துகிறோம் என்பதை இந்த உலகம் இப்போது அறிய வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களும் இயேசுவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! நம்முடைய இரட்சகரை புறக்கணிக்கிறோம் என்பதை சொல்லவும் அல்லது வெட்கப்படுவதை மறுக்கிறோம். ஒரு நாளிலே , எல்லா முழங்கால்களும் முழங்காற்படியிட்டு , எல்லா நாவும் இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடும் என்பதை நாம் அறிவோம்! ஆனால், இயேசுவின் மீதான நம்பிக்கையிலிருந்து பின்வாங்காமல் யாவரையும் ஆண்டவரை நேசிக்க வழிவகுத்ததால், ஒரு நாளிலே அவர் மகிமையுடன் திரும்பியதை நாம் ஒன்றாகக் கொண்டாடும் போது, ​​அந்த நாளில்,குறிப்பாக நமக்கு அறிமுகமானவர்கள் , நேசிப்பவர்கள், நம்முடைய வார்த்தைக்கு செவிக்கொடுப்பவர்கள் யாவரும் நம்முடன் சேர்ந்து ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்!

Thoughts on Today's Verse...

Some of the saddest words a child can hear are these: "I'm so disappointed in you." We don't want the reaction of our Lord and Savior Jesus as we stand before him when he comes in his glory to be, "I'm ashamed of you!" We want the world to know now that we love and honor Jesus as our Lord. We want those around us to come to know Jesus as their Savior and Lord, too! We refuse to be intimated or shamed into renouncing our Savior. We know that one day, every knee will bow, and every tongue will confess that Jesus is Lord! But we want those we know, love, and influence to acknowledge the Lord with us on that day as we celebrate together his return in glory because we refused to back down from our faith in Jesus and led them to love the Lord, too!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனே ; நான் தினமும் இயேசுவுக்காக காரியங்களை செய்ய முற்படுகையில், எனக்கு தைரியத்தையும், ஞானத்தையும், மரியாதையையும் தாரும் . என் வார்த்தைகளும் என் வாழ்க்கையும் இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் என் விசுவாசத்தினால் அறிவிக்கட்டும். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Lord God Almighty; please give me boldness, wisdom, and respect as I seek to stand up for Jesus daily. May my words and my life declare my allegiance to Jesus as my Lord and Savior. In the name of the Lord Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  லூக்கா-Luke 9:26

கருத்து