இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"நீங்கள் பிரசங்கிப்பதை நடைமுறைப்படுத்துங்கள்!" "எந்த நாளும் ஒரு பிரசங்கத்தைக் கேட்பதை விட நான் ஒரு பிரசங்கத்தைப் பார்க்க விரும்புகிறேன்." "உன் வாழ்க்கை உன் வாயின் வார்த்தையாக இருக்கட்டும்!" மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு கூற்றுக்கும் ஒரே குறிக்கோள் உள்ளது: தேவனின் சித்தத்தைப் பின்பற்றுவது மற்றும் ஆவியின் வழிநடத்துதலின் கீழ் இயேசுவின் அதிகாரத்தின் கீழ் மாயமாலம் இல்லாமல் மற்றும் முழுமையாய் ஒப்புவித்து உண்மையுடன் வாழ்வதாகும் . இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தைக் குறித்து மிகவும் வெளிப்படையாகப் பேசுபவர்கள், மற்றவர்களைப் பின்பற்றும்படி நாம் அழைக்கும் அதே காரியத்திற்கு நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாம் நம்புவதாகச் சொல்வதை உண்மையாக வாழப் போகிறோமானால், நாம் சோர்ந்துப்போன வேளைகளில் சுய பரிசோதனை அல்லது கிறிஸ்துவுக்குள் உள்ள ஒரு சகோதரன் அல்லது சகோதரி நமது பெலவீனங்களில் நமக்கு உதவிசெய்து , ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியமாகும் . இந்த சவாலான வசனத்தை நமக்கு வழங்கிய பவுலைப் போல, ஒரு ஓட்டப் பந்தய வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தயாராவது போல இயேசுவுக்காக வாழத் தயாராவோம்.
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள பிதாவே, வல்லமையுள்ள பரிசுத்த ஆவியானவரின் சமூகத்தை எனக்குள் வாசம்செய்யும்படி தாரும் . நான் இயேசுவை குறித்து பேசுவதும், விசுவாசிப்பதும் இன்னுமாய் அவரோடு கூட நான் பயணிக்கும் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று இசைந்திருக்கும்படி கேட்கிறேன் . என் வார்த்தையும், நடக்கையும் எப்போதும் உமக்குப் பிரியமாகவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும், என் ஆண்டவர் இயேசுவுக்குக் கனமாகவும் இருக்கட்டும் என்று அவர் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.