இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இது மிகவும் எளிமையானதாகவும் நேரடியானதாகவும் தெரிகிறது, இல்லையா? நமக்கு முன்பின் தெரியாத ஒருவர் மரித்துப்போன காரியத்தை தலைப்புச் செய்தியாக ஒரு செய்திதாளில் படிப்பது போன்றதாகும். இது குளிர்ச்சியான , கடினமான உண்மை ! ஆனால் இந்த வார்த்தை நமக்கோ வேறு விதமாக புரிகிறது. இந்த கிருபையின் அறிக்கையின் கீழ், தேவனுடைய நொறுங்குண்ட இருதயத்தையும் , பரலோகத்தின் மகா தியாகத்தையும் , மதவாதிகள் என்று கூறப்படும் மனிதர்களின் மிருகத்தனம் மற்றும் கொடூரமான "மரணத்தின் அதிகாரி " - சாத்தானிடம் நம்மை கைவிடாமல் தேடி அரவணைத்த பிதாவின் அன்பு ஆகியவற்றை பார்க்கலாம். அவன்(சாத்தான் )ஆரம்பம் முதலே மனுஷ கொலைப்பாதகனாய் இருக்கிறான் (யோவான் 8:44-45) ஒரு காலத்தில் மிருக பலியை அதன் அதிக தனிப்பட்ட செலவு மற்றும் மிருக பலிகளை அனுபவித்தவர்களுக்கு, இந்த வசனம் ஒரு தலைப்புச் செய்தியை விட மிக அதிகம்: இது ஒரு "கிருபையின் வார்த்தை ". இயேசுவானவர் " நம் எல்லாருக்காகவும் ஒரே தரம் " பலியானார் , இனி மிருகத்தின் பலி எப்பொழுதும் தேவைப்படாது (எபிரேயர் 7:25-27, 9:11-14). இயேசுவின் தியாகத்தை நம்பி எதிபார்த்திருந்த அனைவரையும் "தேவனிடம் " இயேசுவானவர் கொண்டு வந்து சேர்ப்பார் என்ற வாக்குத்தத்தத்துடன் இது வந்தது - தேவனுக்கும் நமக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை, தேவனுக்கும் நமக்கும் இடையில் எந்த இடைத்தரகர்களும் தேவை இல்லை. இயேசு பரலோகத்தின் திறந்த வாசலாய் மற்றும் தேவனின் திறந்த இருதயத்துடன் நம்மை , "வீட்டிற்கு வா, நான் உனக்காக காத்திருக்கிறேன்"என்றார்.
என்னுடைய ஜெபம்
கிருபையுள்ள பிதாவே , உம்முடைய தியாகம் மற்றும் கிருபைக்காக எனது பாராட்டுக்களை தெரிவிக்க நான் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும்? நான் உணர்ந்ததைச் சொல்வதற்கு என்னிடம் போதிய ஞானமும் வார்த்தைகளும் இல்லை. ஆனால் இந்த உணர்தலில் கூட, உம்முடைய பரிசுத்த ஆவியின் ஈவு என் வார்த்தைகளையும் என் இருதயத்தையும் நினைவுகளையும் நீர் எப்பொழுதும் கேட்பதை உறுதி செய்வதை நான் அறிவேன். என்னிடம் உள்ள நன்மையான ஈவும் மற்றும் நிலையான அனைத்தும் உம்முடைய கிருபையினால் வருகிறது என்று அறிவேன் . நீர் செய்த சகல நன்மைக்காகவும் , நீர் இருக்கிற பிரகாரமாகவே இருப்பவர்களுக்காகவும் எனது மாறாத அன்பையும் இதயப்பூர்வமான நன்றிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.