இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் உதாரத்துவமுள்ளவர்களாக , இரக்கமுள்ளவர்களாக, பரிசுத்தமானவர்களாக, நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார். ஏன்? ஏனென்றால் அவர் தான்: பரிசுத்தமானவர், நீதியான குணம் நிறைந்தவர் (1 பேதுரு 1:13-16; 2 பேதுரு 1:5-11) அத்துடன் கிருபையும் இரக்கமும் நிறைந்தவர் (யாத்திராகமம் 34:6-7; உபாகமம் 10:18) . இந்த வகையான முழுமையான தெய்வீக குணம் நம் அனுதின வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதில் காண்பிக்க வேண்டும். நாம் பரிசுத்தமாகவும் நீதியுள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும், மனதுருக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நீதியையும், பரிசுத்தத்தையும் சமரசம் செய்யக்கூடாது. இரக்கத்தையும் அன்பையும் ஒதுக்கி வைக்கக் கூடாது. நம்மில் பலர் இதை ஒரு கடினமான காரியமாக காண்கிறோம். இருப்பினும், நம் வாழ்வில் அவருடைய குணத்தைப் பிரதிபலிப்பதின் மூலமும், பரிசுத்த ஆவியானவர் நம்மை இயேசுவின் குணாதிசயத்தை போல மாற்றியமைப்பதன் மூலமும், நம்முடைய தேவனை கனப்படுத்த முற்படும்போது, அது ஒரு சரியான சமநிலையைக் காக்க அழைக்கப்படுகிறோம் (2 கொரிந்தியர் 3:18; கலாத்தியர் 5:22- 23) எல்லாவற்றிற்கும் மேலாக, மனித மாம்சத்தில் தேவனின் நீதியான தன்மை மற்றும் கிருபையுள்ள இரக்கத்தின் ஜீவனுள்ள நிரூபனமாக இயேசுவானவர் இருந்தார் (யோவான் 1:1-3, 14-18).
என்னுடைய ஜெபம்
தேவனே , நீர் பரிசுத்தமும் நீதியும் உள்ளவர். திக்கற்றவர்களுக்கு இரக்கமுள்ள தேவன் நீரே. மறக்கப்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களுக்காக ஊழியம் செய்யும்படி எங்கள் இரக்கத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகரிக்கவும். உம் விருப்பத்தை பிரதிபலிக்கும் ஆழமான பரிசுத்ததிற்க்கு எங்கள் ஆத்துமாவை நகர்த்துங்கள். உம்முடைய முழுப் பண்பும், இயேசு காட்டிய குணமும் எங்கள் வாழ்வில் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.