இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வலிமையானவர்கள், பலவீனமானவர்களை அல்லது அதிக பாதிப்புக்குள்ளானவர்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் வன்முறை, மிரட்டல் , கையாளுதல் , வேட்டையாடுதல் மற்றும் அடிமைப்படுத்துகிற எந்த வழியையும் தேவன் அருவருக்கிறார். பலவீனமான மற்றும் சக்தியற்றவர்களை வேட்டையாடுகிற வலிமையானவர்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர்களை அடிப்படையாகக் கொண்ட துன்மார்க்கத்தை தேவன் முற்றிலுமாய் வெறுக்கிறார் - அப்பாவி மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை துஷ்பிரயோகம் செய்து அடிமைப்படுத்தும் பாலியல் வேட்டையாடுதல் ஒரு உதாரணம். நம் செயல்கள் மற்றும் வளங்கள் மூலம், பலவீனமானவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும், தீமையைச் செய்து அவர்களை இரையாக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நீதியை கேட்கும் அன்பின் தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும். திமிர்பிடித்த மற்றும் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் அவர்களின் பாவத் திட்டங்களில் சிக்கி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம்!

என்னுடைய ஜெபம்

தேவனே , அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தவறாகப் பயன்படுத்துவதையும் வெறுக்கும் இருதயத்தை எனக்குத் தாரும் . என் இரட்சிப்பைக் கொண்டுவர நான் சக்தியற்றவனாக இருந்தபோது, ​​என்னை இரட்சிக்க இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி தேவனே. (ரோமர் 5:5-11). மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும், அடிமைப்படுத்தப்படுவதையும் அல்லது சிறுமைப்படுத்துவதையும் நான் பார்க்கும்போது இயேசுவைப் போன்ற இருதயத்தை எண்ணிலே சிருஷ்டியும். இதுபோன்ற சூழ்ச்சியான வன்முறைகளை அகற்ற நாங்கள் முயலும்போது உம் உதவிக்காக என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து