இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கடந்த பல ஆண்டுகளாக விசுவாசிகளுக்கு நாட்கள் கொடியதாக இருந்தது . உலகெங்கிலும் உபத்திரவமானது எல்லா நேரத்திலும் இருந்ததை விட மிக அதிக உச்சத்தில் இருந்தது . அமெரிக்காவில், ஒரே நேரத்தில் மக்களை கொல்லும் கொலைபாதகர்கள் தேவனை விசுவாசிப்பவர்களை குறிவைத்தனர். அவர்களுடைய விசுவாசத்திற்காக மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டாலும் , கர்த்தருக்காக அவர்கள் அளித்த சாட்சி நமக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இத்தகைய பயங்கரமான கொடூரத்தை எதிர்கொள்ளும்போது நமக்கு பல வழிகள் உள்ளன. பயம் அவர்கள் மத்தியில் இருக்கக்கூடாது. இது ஒரு பழைமையான அச்சுறுத்தும் ஒரு வகையாய் ஆரம்ப கிறிஸ்தவ சமூகத்தின் காலகட்டத்தில் இவைகள் இருந்தது . இயேசுவின் நாட்களுக்கு முன்பே யூதர்கள் இரண்டு காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டார்கள்: ஒன்று அவர்கள் ஒரே மெய்யான தேவனை விசுவாசித்தார்கள் மற்றும் இனத்தின் அடிப்படையில் யூதர்களாயிருந்தனர் . அதிகால முதல் செய்து வந்த ஜெபத்தை இன்றைய வேதத்திலிருந்து மீண்டும் ஜெபிக்கத் தொடங்கும் நேரம் என்று நான் நம்புகிறேன். நாம் ஜெபிக்கும்போது, மற்றவர்கள் நமக்கு என்ன செய்தாலும், அவர்களால் நம்மை தேவனிடமிருந்தும், அவருடைய அன்பிலிருந்தும், அவருடைய எதிர்காலத்தில் அவர் நமக்காக வைத்திருக்கும் மீட்பிலிருந்தும் பிரிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம்.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள பிதாவே , தயவுசெய்து எங்கள் உலகமானது சமாதானத்துடன் இருக்கும்படி ஆசீர்வதிக்கவும். மனிதர்களின் வெறுப்பின் மூலம் சாத்தான் உமது பிள்ளைகளை துன்புறுத்திய கொடுமைகளிலிருந்து எங்களுக்கு ஓய்வு கொடுங்கள். எங்கள் நம்பிக்கையைப் பற்றி வெளிப்படையாகவும், மன்னிப்பதில் தாராளமாகவும், எங்கள் நம்பிக்கையில் உறுதியாகவும் இருப்பதற்கு, சமாதானத்திலோ அல்லது துன்புறுத்தலோ எங்களுக்கு தைரியத்தை தாரும் . கடைசியாக , பிதாவே , உம்மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக யாருடைய அன்புக்குரியவர்கள் மரண ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டர்களோ அல்லது துன்புறுத்தப்பட்டோரோ அவர்களை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.