இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாதாபும் அபியுவும் கர்த்தருடைய பரிசுத்த சமூகத்தில் தங்கள் கீழ்ப்படியாமையினால் தேவனை அவமதித்த பிறகு மோசே இந்த வார்த்தைகளைப் பேசினார். தேவன் நாதாபையும் அபியூவையும் கொன்றதால் ஆரோன் அமைதியாக இருந்தார். அவர்கள் தேவனின் பரிசுத்தத்தை அவமதித்தார்கள், அவருடைய பிரசன்னத்திற்குள் நுழைவதற்கு அவருடைய கிருபையின் ஈவு இல்லாமல் ஒருவரும் தேவனுடைய பரிசுத்த சமூகத்திற்குள் அணுக முடியாது. நாம் தேவனுடைய பரிசுத்தத்தை புறக்கணித்து, நாம் சிறந்ததாக நினைக்கும் விதத்தில் காரியங்களைச் செய்யும்போது, விலையேறப்பெற்ற மற்றும் பரிசுத்தமானதை களங்கப்படுத்துகிறோம். தேவன் பரிசுத்தராக அறியப்படுவார் மற்றும் அப்படியே தம்மை விளங்கவும் செய்கிறார் , அவருடைய மக்களின் மூலமாக இல்லாவிட்டாலும் , தேவன் தம்முடைய சகாயத்தினால் அப்படி அறியப்படுகிறார் . நாம் தேவனை ஆராதிப்பதற்கு தீவிரமாகக் கருதுவோம், அவரைப் பயத்துடனும் ஆச்சரியத்துடனும் கனப்படுத்துவோம் (எபிரெயர் 12:28-29). ஒரு சபை கட்டிடத்திலோ அல்லது மற்ற விசுவாசிகளைச் சுற்றியிருக்கும் போது நாம் செய்யும் காரியங்களுக்கு மட்டுமே நமது ஆராதனையை கட்டுப்படுத்த மறுப்போம். நம் முழு வாழ்க்கையே அவரை ஆராதிப்பது என்பதை உணர்ந்து (ரோமர் 12:1-2) நாம் செய்யும் எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்புடன் நம் வாழ்க்கையை வாழ்வோம் (1 பேதுரு 1:15-16), நம் உதடுகளாலும் இன்னுமாய் நம் வாழ்கையின் மூலமாய் அவரை ஆராதிப்போம். (எபிரேயர் 13:1-16).
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள மற்றும் உன்னதமான தேவனே , நீதியிலும்,பரிசுத்தத்திலும் பரிபூரணமானவர் தயவுசெய்து என் பாவங்களை எல்லாம் மன்னித்தருளும் . உம்முடைய பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் மற்றும் பரிசுத்தப்படுத்தும் வல்லமையினால் என்னை முற்றிலுமாய்ச் சுத்திகரித்து, பரிசுத்தமாக்கும். என் வாழ்வு உமக்கு ஒரு பரிசுத்த தியாகமாக வாழட்டும் - நீர் எனக்காக செய்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு சந்தோஷத்தினால் அடியேன் செய்யும் ஆராதனை நீர் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் உமக்கு மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.