இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அநியாயக்காரர் மற்றும் நல்நடக்கையற்றவர்கள் பட்டியலைக் கூறி (1 கொரிந்தியர் 6:9-10), அடுத்த வாக்கியத்தில் இந்த எண்ணி முடியாத கிருபையின் வார்த்தையுடன் பவுலானவர் தனது உபதேசத்தை சொல்லி முடித்தார். அவர் அதைச் செய்ய வேண்டியதாய் இருந்தது, ஏனென்றால் நாம் அனைவரும் "பழகின இடத்திலே " எப்பொழுதும் வாழ விரும்புகிறோம் . நம்மில் சிலருக்கு, நமது கடந்தகாலத்திலே செய்த சாதனைகளினாலும் மற்றும் நேற்றையதினத்திலே உண்டான இனிமையான உணர்வினாலும் காரியங்களை நியாயப்படுத்தி திமிர்பிடித்த வாழ்க்கை வாழும்படி விரும்புகிறோம் . இந்த குழுவிற்கு பவுலானவர் பிலிப்பு சபை மக்களுக்கு பிலிப்பியர் 3:4-9 எழுதினார். மற்றவர்களுக்கு, நம் கடந்த காலத்தின் காயங்கள் மற்றும் பாவங்கள் கனமான பாரம் நிறைந்த பையாக மாறி, வாழ்நாள் முழுவதும் அவற்றை நாம் நம்முடன் இழுத்துச் செல்கிறோம். நாங்கள் அந்தப் பாரமான யாவற்றையும் எந்நேரமும் வெளியே எடுத்து எங்கள் துயரத்தை மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டுவருகிறோம் . நாம் ஏன் நம் வாழ்க்கையை நகர்த்த முடியாது என்பதை நிரூபிக்க அவற்றைப் பயன்படுத்துகிறோம். பவுலானவர் கொரிந்து சபை மக்களுக்கும், அவர்கள் மூலம் இந்த வசனப் பகுதியில் நமக்கு ஒரு மகிமையான விழிப்புணர்வைத் தருகிறார். கிறிஸ்துவுக்குள் , பைகளும் இல்லை, பாரங்களும் இனி இல்லை. நாங்கள் சுத்தமாக இருக்கிறோம்! நாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டோம்! கடந்த காலத்திலிருந்து நாங்கள் விடுபட்டோம்! எந்த தவறும் செய்யாத நிரபராதி என்று நாங்கள் அறிவிக்கப்பட்டுள்ளோம். எப்படி? ஏன்? யார்?இயேசுவின் தியாகமும் ஜெயமும் , பரிசுத்த ஆவியின் வல்லமையான கிரியையும் நமக்கு எல்லாவற்றையும் மாற்றியது.
என்னுடைய ஜெபம்
நேற்றைய தினங்களில் தவித்ததற்காகவும், என் இன்றைய நாளை அழித்ததற்காகவும், என் நாளைய தினத்தை மழுங்கடித்ததற்காகவும், பிதாவே என்னை மன்னியுங்கள். "நான்-வாழ்கிற இடத்திலே " என் விருப்பப் படியே அந்த நிலத்தில் வாழ்வதற்கான வாய்ப்பை கொடுத்து எனக்கு உதவுங்கள். நீர் எனது கடந்த காலத்தை சரியான இடத்தில் வைத்து, இன்று என்னில் ஒரு புதிய மகிமையான காரியத்தை செய்ய விரும்புகிறேன் என்று நம்புவதற்கு எனக்கு தைரியத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆமென்.