இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மெய்யாகவே , தேவன் எப்போதும் தம்மை உண்மையாகத் தேடுபவர்களுக்கு சமீபமாய் இருக்கிறார். நிதர்சனமான பிரச்சனை என்னவென்றால், நாம் அவரிடமிருந்து விலகி, ஆர்வத்தை இழந்து, அவருடைய சமூகத்தை விட்டு வெளியேறுகிறோம். எனவே நாம் அவரைத் தேடி, அவருடைய கிருபையையும்,உதவியையும் பெறுவோம், அதே நேரத்தில் அவர் ஒருவரே மெய்யாகவே நம்மை இரட்சிப்பவர் என்பதை உணர்ந்து கொள்வோம்.
என்னுடைய ஜெபம்
பிதாவே , நான் உம்மை முழு மனதுடன் தேடுகிறேன். உம்முடைய வார்த்தையின் மூலம் நான் உம்மைப் பற்றி அறிய முற்படுகையில், ஒரு சாந்தமுள்ள தந்தை தனது பிள்ளையை அறிந்திருப்பது போலவும், ஒரு பிள்ளை தனது சாந்தமுள்ள தந்தையின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதைப் போலவும் உம்மை அறியவும் உம்மால் அறியப்படவும் நான் ஏங்குகிறேன். பிதாவே , என் தேவனாக மாத்திரம் இராமல் , ஆனால் என் புரிதலுக்கு அப்பாற்பட்ட வழிகளில் எனக்கு உண்மையாகவும் இருங்கள். உம் பிரசன்னத்தை உணரவும், உம் சமூகத்தை அறியவும் எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.