இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுக்கு விரோதமான பொல்லாத ஆவிகளும் மற்றும் அவர்களின் ஆளுமையின் கீழ் உள்ள பொய்யான போதகர்களுக்கும் எதிராக தான் போரிட வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் அறிந்திருந்தார் (எபேசியர் 6:10-12) . இந்த பொல்லாத ஆவிகளின் ஆதிக்கம் இந்த உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தேவனுடைய வீடாகிய சபைகளில் சாத்தானின் தந்திரங்கள் ஆட்சி செய்யாமல் இருக்க, பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்பட்ட சர்வாயுதவர்க்கத்தின் அதிகாரம் பெற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று பவுல் தீர்மானித்தார். பலவிதமான தேவர்கள் , நம்பிக்கைகள் மற்றும் தேர்வுகள் ஆகியவற்றில் வெறிபிடித்த ஒரு காலக் கட்டத்திலே வாழ்ந்த மக்களின் நடுவில் அவர் சத்தியத்திலே மிகவும் உறுதியாக இருந்தார். இப்பொழுது நாம் வாழும் நாட்களில் நாம் குறைவான விழிப்புடன் இருக்க முடியுமா? பவுலானவர் எதிர்கொண்ட அநேக காரியங்கள் இந்நாட்களில் ஒப்பிடும்போது அதே வெறித்தனமாக இருக்கும் நம் கலாச்சாரத்தின் நடுவிலே நாம் சத்தியத்தின் மீது குறைவான உறுதியுடன் இருக்க முடியுமா? நிச்சயமாக இல்லை! ஒவ்வொரு காரியத்தையும் "அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் " நாம் நிர்மூலமாக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

ஆ மகா பரிசுத்தமுள்ள தேவனே , அநேக யோசனைகள் நிறைந்த இவ்வுலகில் நாங்கள் ஆவிக்குரிய விழிப்புணர்வு இல்லாமல் மற்றும் பயந்தவர்களாய் இருந்ததற்காக எங்களை தயவாய் மன்னித்தருளும் . அன்புடன் சத்தியத்தை பேச உம் பரிசுத்த ஆவியால் எங்களை உற்சாகப்படுத்தும் . விசுவாசம் , நீதி, சத்தியம் ஆகியவற்றுக்குத் தீங்கிழைக்கும் மற்றும் விரோதமான கருத்துக்களை நாங்கள் உறுதியான மற்றும் ஆவிக்குரிய ஞானத்துடன் எதிர்க் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எங்களுக்கு உணர்த்துங்கள். இதை வலுக்கட்டாயமாகவும், தெளிவாகவும், கனமாயும் செய்ய விரும்புகிறோம். "எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப் படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" இவைகளை செய்ய முற்படும்போது எங்கள் இருதயங்களை அனல் மூட்டி எழுப்பியருளும் ." உமக்கு பரிசுத்தமான மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்களாக இருக்க எங்களை எடுத்து பயன்படுத்தியருளும் , இவை யாவற்றையும் இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து