இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மலைகளைப் பார்க்கும் போது, ​​அது நம்மை விட எவ்வளவு பெரியது என்பது மட்டுமல்லாமல், நாம் இவ்வுலகில் இருந்ததை விட அது எவ்வளவு காலம் இங்கு இருந்திருக்கிறது என்பதையும் அறிந்து, நாம் சிறியவராக உணர்கிறோம். ஆனால் தேவனானவர் எல்லா மலைகளும் உருவாவதற்கு முன்பே இருந்தார் , அது ஒன்றுமில்லாமல் உருகிய பிறகு நீடித்த காலம் இருப்பார் . அவரே பாதுகாவளரும், நிலையான உறுதியான ஒரே நித்திய கன்மலையுமானவர் . நம்மிடம் உள்ள அனைத்துமே அவரிடத்தில் காணப்படுகின்றன.

என்னுடைய ஜெபம்

நீர் நித்தியமானவர், என்றும் இருப்பவர் , இருந்தவர் , என்றென்றும் இருக்கப் போகிறவர், நீர் எப்போதும் என் தேவன் , என் மீட்பர், என் இரட்சகர், என் மேய்ப்பர் மற்றும் என் ஆண்டவர் என்று நான் நம்புகிறேன்.என்னுடைய எல்லா நாட்களையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து