இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் மற்றும் காரியங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் கணிக்க முடியாத, அரிதான, விசித்திரமான விருப்பத்தை விட சமாதானம் என்பது அதிகம். அப்போஸ்தலனாகிய பவுல் விவரிக்கும் சமாதானம் தேவனுடனான ஒரு மெய்யான சமாதானமாகும் . இந்த சமாதானம் வெறும் அமைதலான மற்றும் மோதல் இல்லாத வாழ்க்கையின் நமது விருப்பத்தை விட மிகவும் ஆழமாக செல்கிறது. இயேசு, பிதாவாகிய தேவனுக்கு தம்முடைய கீழ்ப்படிதலின் மூலமாக , தேவனுடனான சமாதானத்தை நமக்காக நிஜமாக்கினார். ஆம், தேவனானவர் கிருபையை நமக்கு வழங்கி அதை உறுதியும் செய்திருக்கிறார். ஆனால், இந்த சமாதானம் அவருக்குள்ளும் அவருடைய குணத்தோடும் இசைந்திருப்பதால், நித்திய சமாதானத்தைக் கொண்டிருக்கிற நமது மகத்துவமும் பரிசுத்தமுமான தேவனின் மகிமையில் பங்கடைவோம் என்ற மகிழ்ச்சியோடே மற்றும் நம்பிக்கையோடே இருக்கலாம் .
என்னுடைய ஜெபம்
உன்னதத்தில் உள்ள மகத்துவமும் பரிசுத்தமுமுள்ள தேவனே , இயேசுவின் மூலமாய் உம்முடைய கிருபையின் ஈவுக்காக நான் உம்மை போற்றுகிறேன். உமது கிருபையைச் சார்ந்து நிற்க எனக்கு நம்பிக்கை , பரிசுத்தம், எதிர்பார்ப்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஜீவியத்தை உமக்காக வாழ தைரியத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.