இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கெத்செமனே தோட்டத்தில், யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார், ஜெப ஆலய வீரர்கள் அவரைக் கைது செய்தனர். பேதுரு கர்த்தரைக் காப்பாற்ற ஒரு பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுக்கு எதிராக அதை பயன்படுத்தினான் (மத்தேயு 26:47-51). இயேசு பேதுருவிடம், " உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். " (மத்தேயு 26:52) என்று கூறினார். பொல்லாங்கு பொல்லாங்கை தூண்டுகிறது, மேலும் பொல்லாங்கு செய்பவர்கள் தங்கள் தலையின் மேல் பொல்லாங்கின் கசப்பான பதிலைச் சுவைக்க வேண்டியதில்லை. தேவனின் ஞானியின் ஞானியாகிய சாலமோன் இந்த வசனத்தில் அதையே கூறுகிறார், ஆனால் ஒரு முக்கியமான கருத்தை உள்ளடக்கி கூறுகிறார் . நீதிமான்களுக்கு ஆசீர்வாதம் வரும். நீதியை விதைத்தாலும், வன்முறையை விதைத்தாலும், எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் என்று கூறுகிறார்!
Thoughts on Today's Verse...
In the Garden of Gethsemane, Judas betrayed Jesus and Temple soldiers arrested him. Peter drew a sword to defend the Lord and used it against the servant of the high priest (Matthew 26:47-51). Jesus told Peter, "Put your sword back in its place... for all who draw the sword will die by the sword" (Matthew 26:52). Violence begets violence, and rarely do violent people not have to taste the bitter repayment of violence on their own heads. God's Wise Man essentially says the same thing in this verse but with one key addition. Blessings come to the righteous person. We reap what we sow, whether we sow righteousness or violence!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே, தயவுசெய்து என்னை நீதியினால் ஆசீர்வதியும் - உமது கிருபையினாலும் இரக்கத்தினாலும் மாத்திரமல்ல , உமது பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்குதலின் வல்லமையினால் என் இருதயத்தை மாற்றியருளும் . மேலும், அன்பான பிதாவே , தாவீது இராஜாவின் வேண்டுதலைக் கொண்டு எங்கள் ஜெபத்தை நிறைவு செய்கிறோம் : துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். (சங்கீதம் 7:9). இந்த மன்றாட்டை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
My Prayer...
Holy God, please bless me with righteousness — not just by your grace and mercy, but by your Holy Spirit's transformation of my heart. And, dear Father, we close our prayer with the plea of King David:
Bring to an end the violence of the wicked and make the righteous secure — you, the righteous God who probes minds and hearts (Psalm 7:9).
We pray this in the name of Jesus our Lord. Amen.