இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அடிமைத்தனம் என்பது " நம் ஆத்தும பசியின் திருப்தியானது தவறான ஆதாரத்தை நோக்கியுள்ளது என்று தேவன் கூறுகிறார் ". சங்கீதம் 63 ஆம் அதிகாரத்தில் இது உண்மை என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. தேவனைத் தேடுவதற்கான வாஞ்சை நம்மில் ஆழமாக உள்ளது, ஏனென்றால் அவர் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை, மேலும் நம்மால் அவர் அறியப்பட வேண்டும் என்று வஞ்சிக்கிறார் (அப்போஸ்தலர்17ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம் ). ஆனால் பெரும்பாலும் நம் ஆத்துமா தேவனுக்காக அதிகமாக வாஞ்சிப்பது மிக சிறந்தது , நாம் முழுமையான பலனை பெற நாம் திரும்பும் கடைசி இடம் அவரே . அவரைத் தீவிரமாகத் தேடி, அவரில் உள்ள நமது ஆத்தும தாகத்தை தீர்த்துக் கொள்வோம்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்த பிதாவே, உமக்கான வாஞ்சையை என் இருதயத்திலேயும் , உமது சமூகத்தை என் ஆத்துமா வாஞ்சிக்கிறது என்பதை என் அறிவினால் நிரப்பி புரிந்துகொள்ள உதவியருளும் . திருப்தியடையாத விஷயங்களில் நான் அநேக வேளைகளில் என் தாகத்துக்கு நிவாரணம் தேடினேன் என்று ஒப்புக்கொள்கிறேன். திருப்திக்கான மற்ற எல்லா ஆதாரங்களும் தற்காலிகமானவை மற்றும் பொய்யானவை என்று நான் இன்று உறுதியளிக்கிறேன். உமது பிரசன்னத்திலும் கிருபையிலும் நான் இளைப்பாறும் வரை உமது வார்த்தையினாலும் உமது ஆவியினாலும் உம்மையும் உமது சித்தத்தையும் தொடருவேன் என்று உறுதியளிக்கிறேன். என் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை வாய்ந்த நாமத்தில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.