இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விசுவாசத்தின் சில அம்சங்கள் விவரிக்க முடியாதவை: அவற்றை அனுபவிப்பதன் மற்றும் கிரியை நடப்பிப்பதன் மூலமாகவே அறிய முடியும். கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவருடைய கிருபையிலே தஞ்சமடைந்து, அவருடைய பராமரிப்பில் அடைக்கலம் கொள்ளுங்கள். நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஏனென்றால் அவரை நம் அருகிலேயே கண்டு நம் வாழ்க்கையின் பயங்கரமான ஆபத்துகளிலிருந்தும், மரண திகிலிலுமிருந்தும் நாம் அடைக்கலம் பெறலாம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, உம்மை இன்னும் அதிகமாக அறிந்துக் கொள்ள உதவுங்கள். அன்புள்ள ஆண்டவரே என்னை முழுவதுமாக உம்முடைய பராமரிப்பில் ஒப்புக் கொடுக்க என் இதயத்தை விசாலமாக்கும்படி கேட்கிறேன் . நீர் எவ்வளவு கிருபையுள்ளவர் என்பதைப் பார்க்க என் கண்களைத் திறக்கவும் - நான் மாத்திரம் காணும்படியாக அல்ல, உம் கிருபையை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதற்காகவே. உம்முடைய நன்மைக்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து