இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
1 பேதுரு 2, "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்.... " அதற்கு நாம் இங்கே சாட்சிகளாக இருக்கிறோம் என்பதை நினைப்பூட்டுகிறது. தேவனின் இரட்சிப்பின் கிரியையை நாம் கண்டும் அனுபவித்தும் இருக்கிறோம். நாம் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் . நாம் அவருடைய வல்லமைமிக்க மாபெரிதான மீட்பின் நாள் வர காத்திருக்கும், ஜனங்களாயிருக்கிறோம் . நாம் எப்படி மௌனமாக இருக்க முடியும்? நாம் எப்படி கசப்பாக, அவநம்பிக்கையாக அல்லது உற்சாகயின்மையாக இருக்க முடியும்? கல்லறையை வெறுமையாக்கி, இயேசுவின் மரண சரீரத்தை நம் ஜீவனாகவும், உயிர்தெழுந்து உன்னதத்திற்கு உயர்த்தப்பட்டு அவரை ஆண்டவராகவும் ஆக்கியவர் நம்முடைய தேவன் . அவரே நம்மை இரட்சிக்க வல்லவர். அவரே நம் இரட்சகர்!
என்னுடைய ஜெபம்
வல்லமையுள்ள தேவனே , நான் மிக எளிதாக என் அன்றாட வாழ்க்கையில் வழுவினேன், உமது இரட்சிப்பின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்திதின் ஆவியில் தோய்ந்து போனேன் என்று ஒப்புக்கொள்கிறேன். உமது அன்பு நிறைந்த கிரியைகள் , உமது மகத்துவமுள்ள செயல்கள், நீர் வாக்களித்த வாக்குத்தத்தங்கள் ஆகியவற்றைப் பார்க்க எனக்கு புதிய கண்களையும், தைரியமாய் சொல்லத்தக்கதான நாவையும் கொடுத்தருளும் . நீர் என்னை மகிமைக்கு வழிநடத்துகிறீர் என்று நான் நம்புகிறேன், எனவே உம்மை தேவனாக , இரட்சகராக மற்றும் ராஜாவாக அறியாதவர்களுடன் உம்முடைய மகிமையைக் காண்பிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் எனக்கு உதவுங்கள். என் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.