இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"கர்த்தருக்குப் பயப்படுதலே " என்பது பழைய ஏற்பாட்டின் தலைசிறந்த கருப்பொருள்களில் ஒன்றாகும். இந்த வாக்கியத்தை விவரிப்பது சற்று கடினமான ஒன்றாகும். விஷேசமாக வேதாகமத்தில் மீண்டும் மீண்டும் வெளிச்சம் தரக்கூடிய செய்தி "பயப்படாதே " மற்றும் "உண்மையான அன்பு எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும் " என்ற யோவானின் நினைவூட்டல் . இதன் பொருள், "தேவனை பயபக்தியுடன் பற்றிக் கொள்ளுங்கள்" என்பதை விட அதிகம். பொதுவாக, "கர்த்தருக்குப் பயப்படுதல்" என்பது நாம் பொருள்களின் வரிசையில் நம் இடத்தை நினைவில் கொள்வதாகும் . பரலோகத்தில் உள்ள நம் பரிசுத்த பிதாவால் நாம் ஆழமாக நேசிக்கப்படுகிறோம் என்பதை நாம் அறிவோம். நாம் நம்மை ஒப்பிடுகையில் பலவீனர்களும் , பாவிகளும் என்பதை அறிவோம் ஆகிலும் தேவனுடைய இரக்கத்தினாலும், கிருபையினாலும் இரட்சிக்கப்பட்டோம். அவருடைய மகத்துவமும் பரிசுத்தமும் நமக்கு அப்பாற்பட்டவை என்பதையும், நாம் தேவனுக்கு முன்பாக ஒன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். அவரிடமிருந்து நம் தேவையையும், அவரிடம் எதையும் கேட்பதற்கான நமது தகுதியற்ற தன்மையையும் ஒப்புக் கொண்டு நாம் தேவனிடம் வருகிறோம். நம்பமுடியாத உண்மை என்னவென்றால், நாம் தேவனை பிரமிப்புடனும், ஆழ்ந்த மரியாதையுடனும் நோக்கி பார்க்கும்போது, அவர் தம்முடைய கரங்களை விரித்து நம்மை வரவேற்று தம்முடன் கிட்டி சேர்க்கிறார் ( பார்க்க ஏசாயா 57:15).
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும், நீதியுள்ள பிதாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய இரக்கம், கிருபை, மன்னிப்பு ஆகியவற்றிற்காக உமக்கு நன்றி. உம்முடைய அன்பிற்காக, உண்மைக்காக, நீதிக்காக உமக்கு நன்றி. நீர் பரிசுத்தர் , மகத்துவமுள்ளவர் , வல்லமையுள்ளவர், நீர் நடப்பிக்கும் எல்லாவற்றிலும் நீதியுள்ளவர் என்பதை உணர்ந்து நான் முழங்காலில் உம்மிடம் வருகிறேன். உம்முடைய கிருபை மற்றும் உம் பரிசுத்த ஆவியின் ஈவு இல்லாமல், நான் தைரியமாக உமது சமூகத்தை சேர முடியாது என்று நன்றாய் எனக்கு தெரியும். நீதியுள்ள பிதாவே, நீர் என்னுடைய பாவங்களை மன்னித்து, அடியேன் உண்மையுடனும், நேர்த்தியுடனும் இருக்க பெலன் தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.