இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாழ்க்கை பல நிச்சயமற்ற காரியங்களால் நிறைந்துள்ளது. எதிர்பாராத ஒன்று எப்போது நடக்கும் என்று நமக்குத் தெரியாது. அடுத்த பேரழிவு எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் நிறைந்த உலகில், அடுத்த பயங்கரமான கொடூரம் எப்போது நிகழும் என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. நம்முடைய சூழ்நிலைகளை உறுதி செய்ய முடியாதபோது நாம் என்ன செய்வது? எல்லாச் சூழ்நிலைகளிலும் மேலானவரின் சிறகுகளின் கீழ் நாம் அடைக்கலம் புகவேண்டும் ! இன்றைக்கு என்ன நடந்தாலும்...நாம் வாழும் உலகிலும்...நம் சரீரத்திலும் என்ன நடந்தாலும் நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வேன் என்று வாக்களித்த நம் பிதாவாகிய தேவனிடமிருந்து நாம் வாக்குத்தத்தத்தை பெற்றிருக்கிறோம் . நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதால் நம்முடைய ஜீவன் நம் பிதாவிடம் மறைந்திருக்கிறது (கொலோசெயர் 3:1-4). அவரே நம் அடைக்கலம்! அவருடைய சிறகுகளே நமக்கு மறைவிடமாகும் !
என்னுடைய ஜெபம்
பிதாவே , மரணத்தை விட மேலான உமது விடுதலைக்காக நன்றி சொல்லவும் துதிக்கவும் எப்படிப்பட்டதான வார்த்தைகளை கூறுவது போதுமானதாய் இருக்க முடியும்? நீரே அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவும்; நீரே இருந்தவரும் மற்றும் இருக்கிறவரும் மற்றும் இருக்கப் போகிறவருமாகிய தேவனானவர். (வெளிப்படுத்துதல் 1:8, 21:6, 22:13). என்னை மீட்டு, உமது சுவிகார புத்திரராக்கிக் கொண்ட என் அப்பா பிதா நீரே . எனது நம்பிக்கையையும், எனது எதிர்பார்ப்பையும் , எனது எதிர்காலத்தையும் உமது அன்பான கவனிப்பில் வைக்கிறேன், நான் எதற்கும் அஞ்சமாட்டேன் . ஏனெனில் உம் சிறகுகளின் கீழ் என் அடைக்கலத்தைக் கண்டேன்! இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே உமக்கு எல்லாப் புகழும் துதியும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.