இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மனுஷன் அநேக காரியங்களை திட்டமிடுகிறான் , பரலோகத்தில் உள்ளவர் அவருடைய சித்ததின்படி நடபிக்கிறார் ." நம்மில் பெரும்பாலோர் ஆலோசனை வழங்குவதற்கும் பிரமாண்டமான திட்டங்களை உருவாக்குவதற்கு முனைகிறோம் . ஞானம் என்பது குறிப்பிடத்தக்க காலத்திற்கு போதனைகளுக்கு அடிபணிவதன் மூலம் வருகிறது, பின்னர் நீடிய பொறுமையோடே கேட்பதன் முடிவில் மட்டுமே ஞானம் வரும் என்பதை ஞானியின் ஞானி நமக்கு நினைப்பூட்டுகிறார். நீங்கள் என்னைப் போல் இருந்தால், காரியங்களை நடப்பிகிறதற்கு முன்னதாக உங்கள் திட்டங்களைக் கர்த்தருடைய வெளிச்சத்தினால் இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியடைய வைப்பது சிறந்தது . தேவன் ஞானத்தை அளிக்கிறார் என்பதை புதியஏற்பாட்டின் ஞான எழுத்தாளர் யாக்கோபு , நினைப்பூட்டுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. நாம் ஞானத்தை தேடினால் , கொஞ்சமும் சந்தேகப்படாமல் கேட்கும்போழுது தேவன் அதை நமக்கு தருகிறார் , ஞானத்திற்காக ஜெபிக்கும் வேலையிலே , வேதத்தில் கர்த்தருடைய சத்தியத்தைக் பொறுமையோடே கேட்கும்படி ஜெபிப்போமாக , அப்பொழுது ஞானம் வருவதை அறிந்துக்கொள்ளலாம் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , உமது வழிகளை எனக்குக் போதித்தருளும் , என் வாழ்க்கைக்கான உமது பாதைகளைக் கண்டறிய எனக்கு உதவுங்கள். என்னிடம் பல திட்டங்கள் மற்றும் யோசனைகள் உள்ளன, ஆனால் அவை உம்மிடமிருந்து வரவில்லையென்றால், அவை நிலை நிற்காது என்று எனக்குத் தெரியும். உமது ஞானத்திற்கு என்னை வழி நடத்துங்கள் , நான் அதை அறிய முற்படுவது மட்டுமல்லாமல், உமது பரிசுத்த ஆவியால் எனக்கு அருளப்பட்ட பெலத்தினால் வாழவும் முயல்வேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.