இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனை பயபக்தியுடன் தொழுதுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அவர் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே! ம்ம்ம். அதற்கு என்ன அர்த்தம் ? அவருடைய பரிசுத்தத்தில் கவனம் செலுத்தப்படுகிறதா? இது பாவத்திற்கு எதிரான நியாயத்தீர்ப்பைப் பற்றி எச்சரிக்கிறதா? இது அவருடைய தூய்மையின் வெளிப்பாடா? ஆம் ஆம் ஆம்! நீங்கள் பார்க்கிறீர்கள், தேவனானவர் பரிசுத்தமானவர், சுத்தமுள்ளவர் , நீதியுள்ளவர். நமது குற்றம் , குறைகள் , தோல்விகள் மற்றும் பாவங்கள் அவரது பரிபூரணத்துடன் ஒப்பிடும்போது வெளியரங்கமாக தெரியும் . அவருடைய பரிசுத்த அக்கினியால் நம்மை அழிப்பதை விட, தேவன் நமக்குள் இருக்கும் அவருடைய பரிசுத்த அக்கினியின் சுத்திகரிப்பு மற்றும் அதிகாரமளிக்கும் பிரசன்னத்தின் மூலம் நாம் முன்பு இருந்ததை விட மிகவும் அதிகமாக நம்மைப் புதியவர்களாகவும், பரிசுத்தமாகவும் ஆக்குவதற்கு தேவனானவர் விரும்புகிறார் (1 கொரிந்தியர் 6:9). -11). இயேசுவின் மூலமாக நாம் அவரை கிட்டி சேருவது மட்டுமல்லாமல், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே இயேசுவை மாதிரியாக கொண்டு நம் உலகில் வாழும்போது நாம் அவருக்கு மிக அருகில் இருக்க முடியும் (எபிரெயர் 13:1-16; ரோமர் 12:1-2). , அன்பான நண்பரே, அதுவே மிகச்சிறந்த பயபக்திக்குரிய தொழுகையாகும் !

என்னுடைய ஜெபம்

நீதியும் பரிசுத்தமுமுள்ள தேவனே , என் பாவத்திற்காகவும், தைரியமின்மைக்காகவும், விசுவாசத்தை உபயோகப் படுத்தாததற்காகவும் என்னை மன்னித்தருளும் . உமது பரிசுத்தத்தின் மீது சமரசம் செய்து கொள்ளாமல் உமது குமாரனின் சிலுவை மரணத்தினால் என்னை குணப்படுத்தி சீர்செய்து உம் கிருபையால் என்னை முழுமைப்படுத்தி சுத்திகரிப்பதினால் உம்முடைய சமூகத்திற்கு கடந்து வரும்படியான சிலாக்கியத்தை தந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் . இந்த வாரம் அடியேன் வாழும் ஜீவியத்திலே , உம் பரிசுத்தம் என் கிரியையினால் மகிமைப்படும்படியாகவும் , இன்னுமாய் என் குணாதிசயத்தில் பிரதிபலிக்கட்டும் . என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து