இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எரேமியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களிடம் தேவனுடைய வார்த்தைகளைப் பேசி, ஒரே ஒரு மெய்யான தேவன் , கர்த்தர் என்று அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். நீதியின் சிங்காசனத்தில் இருக்கும் நித்திய இராஜாவுக்கு முன்பாக மற்ற தேவர்கள் அனைத்தும் பொய்யான கடவுள்கள் என்று கூறினார் . ஆனாலும், அப்போஸ்தலர் 17ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட அத்தேனே பட்டணத்தார் போலவே, நம் உலகம் தேவனுக்கு மாத்திரம் கொடுக்க வேண்டிய இடத்திலே கை வேலையினால் செய்யப்பட்ட சிலைகளை ஒன்றின் பின்னால் மட்றொரு சிலை வைக்கிறார்கள் . ஆனால் நாம் வித்தியாசமாக இருக்க முடியும். நாம் வித்தியாசமாகவே இருக்க வேண்டும்! நீதி, நியாயம் , கிருபை , இரக்கம் போன்ற தேவனின் ஒளிமயமான மாதிரிகளாய் நாம் இவ்வுலகிலே வாழ முடியும். அவருடைய பரிசுத்தத்தை நம் உலகில் பிரதிபலிக்க முடியும், காணாமற்போன மற்றும் காயப்படுத்தப்பட்டவர்களுக்கான அவரது நம்பிக்கையைப் அவர்களோடே பகிர்ந்து கொள்ளலாம், மேலும் நாம் செல்லும் இடங்களிலும் நாம் சந்திக்கும் நபர்களிலும் நன்மைக்காக மீட்பின் தாக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, இன்றே அதைச் செய்யத் தொடங்குவோம்!

என்னுடைய ஜெபம்

மகா மேன்மையான தேவனே , என் அப்பா பிதாவே , உம் ஆச்சரியமான கிருபையின் ஈவுக்காகவும், என் வாழ்வில் நீர் வைத்த மீட்பின் நோக்கத்திற்க்காகவும் உமக்கு மிக்க நன்றி. நான் வாழும் உலகில் உம் ஊழியத்தை செய்ய நீர் என்னைப் எடுத்துப் பயன்படுத்தி அதினால் உமக்கு கனத்தை கொண்டுவரும்படி செய்வீர் என்று எனக்கு நன்றாய் தெரியும். அப்படியே தயவுக்கூர்ந்து நடப்பித்தருளும் ! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து