இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வார்த்தைகள் இயேசுவிடமிருந்து வந்தவை, அவர் சங்கீதம் 23 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல மேய்ப்பனை பற்றி தாவீது கூறின வார்த்தைகளை போல அவருடைய பங்கை விவரிக்கிறார். இந்த வார்த்தைகளின் பரிச்சயத்தை அவர்களின் வியக்க வைக்கும் கிருபையின் வழியில் நாம் அனுமதிக்க மறுத்தால், அவற்றின் ஆச்சரியமான யதார்த்தத்தை நாம் உணர்கிறோம். பிரபஞ்சத்தின் உன்னத தேவன் நம்மை மிகவும் அதிகமாய் நேசிக்கிறார், மேலும் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் மிகவும் அன்பாகவும் ஈடுபட்டுள்ளார்! அவர் கடந்த காலத்தில் இயேசுவின் மூலமாக நமக்குத் தம்முடைய தயவைக் காட்டினார், நாம் தகுதியற்றவர்களாக இருந்தபோது இயேசு நமக்குக் கொண்டுவந்த கிருபையையும் இரக்கத்தையும் காட்டினார் (ரோமர் 5:6-11). கர்த்தர் இப்போது நம்மை நல்ல மேய்ப்பராக முன்னே சென்று , வழிநடத்துகிறார் மற்றும் நம்மை கவனித்துக்கொள்கிறார். மேலும், இயேசு மறுபடியுமாய் திரும்பி வரும்போது அவர் வியத்தகு முறையில் நம்மீது அவர் கொண்டுள்ள தம்முடைய அன்பைக் விளங்கச் செய்வார் - நமக்காக அவருடைய ஜீவனைக் கொடுக்க மாத்திரமல்ல , இன்று நம் வாழ்வில் நம்மை வழிநடத்த மாத்திரமல்ல , அவருடைய வாழ்க்கையை எப்போதும் நம்முடன் பகிர்ந்துகொள்ளவும்! வாரும் , நல்ல மேய்ப்பனே, வாரும் !

Thoughts on Today's Verse...

These words come from Jesus, who describes his role as the Good Shepherd David described in Psalm 23. If we refuse to let the familiarity of these words get in the way of their astounding grace, we realize their astonishing reality. The supreme God of the universe loves us so generously and is involved in our individual lives specifically and lovingly! He has shown his kindness to us in the past through Jesus and the grace and mercy Jesus brought us when we were undeserving (Romans 5:6-11). The Lord now leads, guides, and cares for us as our Good Shepherd. And, he will dramatically show his love for us again when Jesus returns — not to give his life for us, not just to guide us in our lives today, but also to share his life with us forever! Come, sweet Shepherd, come!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் தகப்பனே, உம்மை இஸ்ரவேலுக்கு பெரிய மேய்ப்பராக வெளிப்படுத்தியதற்காகவும் , எனக்காகத் தன் ஜீவனையே தியாகம் செய்த இயேசுவை நல்ல மேய்ப்பனாக அனுப்பியதற்க்காகவும் உமக்கு நன்றி. இப்போது, ​​எனது நல்ல மேய்ப்பனாக நீர் செய்த மற்றும் செய்யப்போகும் யாவற்றிற்காகவும் உமக்கு நன்றி மற்றும் ஸ்தோத்திரத்தின் தியாகமாக என் இருதயத்தின் அர்ப்பணிப்பையும் என் வாழ்க்கையின் கிரியைகளையும் ஏற்றுக்கொள்ளும் . இயேசுவின் நாமத்தினாலே , உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Dear Heavenly Father, thank you for revealing yourself to Israel as the Great Shepherd and for sending Jesus to be the Good Shepherd who sacrificed his life for me. Now, please accept the commitment of my heart and the actions of my life to be my sacrifice of thanksgiving and praise to you for all that you have done and will do as my Good Shepherd. In Jesus' name, I thank you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யோவான் 10:11

கருத்து