இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாயின் வார்த்தைகளும், பேசும் விதமும் நாம் அனுபவிக்கும் வாழ்க்கையின் தரத்தை பெரிதும் பாதிக்கிறது என்பதை தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். பொல்லாப்பான பேச்சு,கபடு போன்ற காரியங்கள் துடிப்பான வாழ்க்கையை எதுவும் குறைப்பதில்லை. நம்மால் கட்டுப்படுத்த முடியாத வஞ்சகத்தையும்,சேதத்தின் திரலையும் அவர்கள் தளர்த்தினர். இந்த கட்டவிழ்த்துவிடப்பட்ட வல்லமை நாம் யாரைப் பற்றி, யாரிடம் பேசுகிறோமோ அவர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், இறுதியில் நாம் வீசின காரியம் மறுபடியும் நம்மிடம் அவர்களுடைய கொடிய சுமையை திரும்பி நம் வாழ்வில் மீண்டும் கொண்டு வருகிறது .நேர்த்தியானதோ , நன்மையானதோ , ஆரோக்கியமானதோ , பரிசுத்தமானதோ , உண்மையானதோ , ஆசீர்வாதமானதோ அவைகளையே பேசும் மக்களாக இருப்போம். (எபேசியர் 4:20 - 5:12).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவாகிய தேவனே, என் இதயத்தை பரிசுத்தப்படுத்தி , வஞ்சகம், அவதூறு, அருவறுப்பு, பொல்லாப்பு, கபட்டுவசனிப்பு, பெருமை , சராசரி-ஆவி, பிரிவினை , புறம்கூறுதல் மற்றும் காயப்படுத்தும் வார்த்தைகள் இவை அனைத்திலிருந்தும் அடியேனை கழுவியருளும் . தேவனே, அடியேனுடைய வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும் உமக்கு பிரீதியாய் இருப்பதாக. இயேசுவின் நாமத்தினாலே, ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து