இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஓசியா தீர்க்கதரிசி மூலம் தேவன் தம் மக்களைக் கடிந்துகொள்வதற்கு நடுவில், தேவன் தமது மக்களுக்கு இந்த அழகான சவாலைக் கொடுக்கிறார்: "நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்." நாம் அவரைத் தேடும்போது நம் இருதயங்களில் "உழப்படாத" மற்றும் கடினமான நிலத்தை உடைக்க உதவுவதாக தேவன் வாக்குறுதி அளித்துள்ளார். தேவனின் அன்பான கிருபைக்கு நம் இருதயங்கள் மென்மையாக்கும்போது, நாம் அவரையும் அவருடைய வழிகளையும் பின்தொடரும்போது, அவருடைய நீதியின் ஆசீர்வாதத்தை நம்மீது பொழியப்போவதாக அவர் வாக்களிக்கிறார். ஆகவே, நம்மை நீதிமான்களாக இருங்கள் என்ற தேவனின் அழைப்பை நாம் பின்பற்றுவதற்கான கடினமான இலக்காகக் கருதுவதை விட, நாம் அவரைத் தேடி, நம் மென்மையுள்ள இருதயங்களை அவருக்குத் திறக்கும்போது அதைப் பெறுவது ஒரு பெரிய ஆசீர்வாதமாகப் பார்ப்போம்!
Thoughts on Today's Verse...
In the middle of God's rebuke of his people through Hosea the prophet, God gives his people this beautiful challenge: "Sow for yourselves righteousness, reap the fruit of unfailing love." God promises to help us break up the "unplowed" and hardened ground in our hearts as we seek him. As our hearts soften to God's loving grace, he promises to shower his blessing of righteousness on us as we pursue him and his ways. So, rather than seeing God's call for us to be righteous as a hard goal to pursue, let's see it as a great blessing to receive as we seek him and open our softened hearts to him!
என்னுடைய ஜெபம்
உன்னதமான ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்தி என் இருதயத்தை பரிசுத்தப்படுத்தி பண்படுத்தும் , அதனால் அது மென்மையாகவும், உமது விருப்பத்திற்கு ஏற்பவும், தேவைப்படுபவர்களிடம் இரக்கமாகவும் இருக்கும். உமது நீதியை என்மீது பொழிந்தருளும் போது, உமது ஆவி வாழும் பரிசுத்த இடமாக அதை ஆக்குங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
O Lord Most High, use your Holy Spirit to purify and cultivate my heart so that it is soft and receptive to your will and compassionate to those in need. Please make it a holy place for your Spirit to live as you shower your righteousness on me. In Jesus' name, I pray. Amen.