இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சோதனையின் தருணத்தில் , தேவனானவர் நமக்கு இரண்டு விஷயங்களை கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்: 1. தப்பித்துக்கொள்ளும் ஒரு வழி. 2. சோதனை நேரத்தில் எழுந்து நிற்கத்தக்க வல்லமை . இதை நாம் உண்மையில் நம்ப முடியுமா? ஆம், இயேசு இந்த வல்லமையை வெளிப்படுத்தியதால், பரலோகத்தின் தேவன் நமக்கு இந்த வல்லமையை வாக்களித்தார், அவர் உண்மையுள்ளவர், இந்த வல்லமையால் வெற்றி பெற்ற கிறிஸ்துவுக்குள் வாழும் சகோதர சகோதரிகளை நாம் பார்க்கலாம்! இருப்பினும், சவால்கள், கஷ்டங்கள், சோதனைகள் அல்லது சிரமங்களை நாம் எதிர்கொள்ள மாட்டோம் என்பதே அந்த வழி என்று நாம் நினைத்து விடக்கூடாது . சோதனைக்கு அடிபணிய மறுப்பதன் மூலமும், நாம் எதிர்கொள்ளும் சவால்களின் போது உண்மையுள்ளவர்களாக இருந்து அதை கைவிட மறுப்பதன் மூலமும் ஒரு நல்ல குணாதிசியம் நமக்குள் உருவாக்கப்படுகிறது. தேவன் நமக்கு தப்பித்துக்கொள்ளும் ஒரு வழியை வழங்குவார், ஆனால் அவர் நம்முடைய பரிசுத்த குணத்தை வளர்ப்பதிலும் ஆர்வமாக உள்ளார். தப்பித்துக்கொள்ளும் ஒரு வழி மற்றும் நமது பரிசுத்த தன்மையை வளர்ப்பதற்கு இடையில் ஒரு சரியான அளவு இருக்கத்தக்கதாய் தேவனின் கிரியை இருக்கும் . நாம் உண்மையாக இருக்க விரும்புகிறோமா இல்லையா என்பது நாம் கையிட்டு செய்யும் கிரியைகளினால் விளங்கும் (ரோமர் 5:1-5; 1 பேதுரு 1:7).

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழியையும், அதை வெற்றியுடன் எதிர்கொள்ளும் ஆற்றலையும் எனக்கு வழங்கியதற்காக உமக்கு நன்றி. நான் சோதனைக்கு அடிபணிந்து பாவம் செய்த நேரங்களுக்காக என்னை மன்னித்தருளும் . நீர் தப்பிக் உண்டுப்பண்ணி வைத்திருக்கும் வாசலைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று நான் தேர்ந்தெடுத்த அந்த தருணங்களை தயவுசெய்து சரிசெய்து அதற்காக அடியேனை மன்னித்தருளும் . என்னைச் பரிசுத்தப்படுத்தி, அந்த உண்மையுள்ள ஊழியத்துக்காக என்னை மீட்டருளும் , வரவிருக்கும் போராட்டத்திற்கும் மற்றும் சோதனைகளுக்கு என்னைப் பெலப்படுத்தி, நான் வாழும் உலகில் உமது ஊழியதுக்கு என்னைப் பயனுள்ளவனாக்கும் . இயேசுவின் நாமத்தினாலே நான் எப்பொழுதும் உம் வாக்குறுதியையும் கிருபையையும் சார்ந்திருக்கிறேன். அவரை கொண்டு ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து