இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரித்து இருக்க வேண்டாம். இதற்கு கீழ்ப்படிவது கடினமான ஒன்றா? . இது,மிகப்பெரிய ஆத்துமப் போராட்டம் நடக்கும் இடங்களில் ஒன்று என்று நாம் யோசிப்பதை நினைப்பூட்டுகிறது. மெத்தனமாக இருப்பதை விட, மெத்தனமான சிந்தனையோடு இருப்பது ஆபத்தானது, ஏனென்றால் தேவனின் சத்தியத்தையும் பரிசுத்தமான பண்புகளை சிதைக்கும் காரியங்களையும் நாம் தொடர்ந்து நம் சிந்தனைக்கு வழங்குகிறோம். ஆனால் நாம் உலகத்தாரைப் போல் இவ்வுலகத்திற்கு ஒத்த வேஷம் தரிப்பதை விட, நம் மனதைப் புதுப்பித்து, பவுலானவர் கூறியதை போல செய்வதன் மூலம் மறுரூபமாக்கப்படுவோமாக - ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு வார்த்தையையும், கிறிஸ்துவுக்குள்ளாக சிறைபிடிப்போமாக . தசமபாகம் என்பது நமது வருமானத்தில் பத்து சதவீதத்தைக் கொடுப்பதாக நாம் பெரும்பாலும் நினைக்கிறோம், ஆனால் அதைவிட முக்கியமான தசமபாகம் என்னவென்றால் நமது முழு நேரத்திலிருந்து பத்து சதவீதத்தை தேவனுக்கும் அவருடைய காரியங்களுக்கு நம் சிந்தனையையும் கொடுப்பதேயாகும் !

என்னுடைய ஜெபம்

ஆ ஆண்டவரே, தயவுசெய்து என் ஆத்துமாவை பெருமையிலிருந்தும், என் இருதயத்தை அநாகரிகத்திலிருந்தும், என் மனதை உம்முடைய காரியங்களுக்கு போதுமான நேரத்தை கொடுப்பதைவிட,தேவையற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதிலிருந்தும் அடியேனை பாதுகாத்தருளும் . அடியேனுடைய எல்லா எண்ணங்களிலும், என் பிதாவுக்கடுத்த முக்கியமான காரியங்கள் என்ன என்பதை என் இருதயத்தில் போதித்தருளும் ! உமது சித்தத்தை அறிந்து அவைகளின்படியே வாழ்ந்தவரும் என்னுடைய மிகச்சிறந்த மாதிரியாகிய இயேசுவின் நாமத்திலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து