இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவன் கொடுமையை வெறுக்கிறார். கொடுமை செய்பவர்களை அல்லது அவர்களின் கொடுமையுள்ள வாழ்வில் பங்குபெறுபவர்களை நாம் பாராட்டக்கூடாது என்று கூறுகிறார். (நீதிமொழிகள் 3:31) தீமை செய்பவர்களை தேவன் வெறுக்கிறார். அவர்கள் ஜீவனோடு இருக்கும்போது தேவன் அவர்களை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மரித்து போன பிறகு அவர்களுடைய தாக்கத்தையும் குறைக்கிறார். அவர்கள் உண்மையில் என்ன என்பதைப் அறிந்துகொள்ள அவர் அவர்களுக்கு உதவுகிறார். பலவான்களாய் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, அவர்களுடைய தொன்றுதொட்டு இருக்கும் பகையையும் , அக்கிரமத்தையும் அவர் கடிந்துக்கொண்டு, பகைத்து, வெறுத்து, மறக்கப்படுகிறார்கள்.
என்னுடைய ஜெபம்
எங்களுடைய பயங்கரமும், அக்கிரமுமான நேரத்தில், தேவனே தயவு கூர்ந்து அக்கிரமக்காரரின் அச்சுறுத்தல்களை பயனற்றதாக்கி, மேலும் வஞ்சிக்க முயற்சி செய்கிறவர்களும், தங்கள் தீய நோக்கத்தை நிறைவேற்ற விரும்புபவர்களின் நினைவை நாசியில் துர்நாற்றம் வீசச் செய்கிறது போலாக்கும். இயேசுவின் நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறன். ஆமென்.