இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்களுக்கு மிக நெருக்கமான சிநேகிதர்கள் யார்? புதிதாய் அறிமுகமானவர்கள், ஆழமற்ற உறவுகள், இணைய வழி சிநேகிதர்கள் மற்றும் பரபரப்பான உலகில் உண்மையான நட்புகள் சவாலானவை. இன்றைய "நண்பன் " என்பதன் பொருள் கிட்டத்தட்ட அந்த உறவில் ஒன்றுமில்லாதவை . "ஒரு கூட்ட மக்களோடு நேரத்தை செலவிடுவது " அவர்கள் நமக்கு சொந்தமானவர்கள் என்ற தவறான உணர்வைத் தரக்கூடும், ஆனால் அவை அநேக வேளை நம்மை காயப்படுத்தி, சோதனை வேலைகளில் தனியே விட்டுவிடுகிறது. திறந்த மனப்பான்மை , நேர்மையான, ஆதரவான மற்றும் அன்பான உறவுகள் அமைய வேண்டுமானால், ஒன்றாக அநேக மணி நேரம் செலவிடாமல் இவைகள் ஒருக்காலும் நடக்காது. அவருடைய குடும்பமாகிய திருச்சபையிலே உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் உண்டாகும்படி தேவனிடம் கேளுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஊழியம் மற்றும் உதவி செய்யுங்கள். அவர்களின் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, அவைகளுக்காக உங்கள் ஜெபத்திலே உண்மையாக அவர்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள் . மற்ற விசுவாசிகளுடன் சேர்ந்து கிறிஸ்தவ பணியிலே உங்கள் நேரத்தை செலவிடுங்கள். வேதாகம படிப்பு அல்லது உதவிகளை செய்யும் குழுவில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் . நீங்கள் அப்படி செய்யும்போது, "சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு" என்று நீங்கள் ஜெபிக்கும்போது, எல்லா நேரத்திலும் அதாவது (சந்தோஷத்திலும் மற்றும் துக்கத்திலும்) உங்களோடு இருக்கும் அவ்வகையான சிநேகிதரை தேவன் உங்களுக்குத் தருவார் என்று நம்புங்கள். சிநேகிதர்களை கண்டுபிடிப்பது எளிது, ஆனால் அவர்களை முழுமையாக சார்ந்திருக்க முடியாது. உண்மையான கிறிஸ்தவ சிநேகிதர்களின் வளர்ச்சி என்பது முயற்சி மற்றும் நேரத்தின் முதலீடாகும், ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களுடன் நாம் என்றென்றும் நம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளலாம் .
என்னுடைய ஜெபம்
விலையேறப்பெற்ற தேவனே , எனது மிக சிறந்த நண்பர்களுக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன்... (உங்கள் நண்பர்களின் பெயர்களை இங்கே சேர்க்கவும்.) அன்பான பிதாவே , இந்த வாரத்திலே அடியேனை அவர்களின் நண்பராக ஏற்றுக்கொள்ள காத்திருப்பவர்களின் வாழ்க்கையிலே என்னை வழிநடத்தி செல்லுங்கள். இன்றைய வசனத்தைப் படிக்கும் அனைவரையும் ஒரு கிறிஸ்தவ நண்பர்களை தந்து ஆசீர்வதித்தருளும் . உம்மோடு சஞ்சரிக்க அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். அன்பான பிதாவே , என் உண்மையுள்ள நண்பரான இயேசுவுக்காகவும் நன்றி செலுத்துகிறேன் , அவருடைய வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.