இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கிருபையினால் ஊழியம் செய்கிறோம். இயேசு நமக்குக் கொடுத்த தேவனுடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் கிருபையினால் நாம் நீதிமான்களாகவும் குற்றமற்றவர்களாகவும் தேவனுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம். இயேசுவின் கிருபையின் காரணமாக திருச்சபைக்கான ஊழியத்தில் பயன்படுத்த ஆவிக்குரிய வரங்களை நாம் பெற்றிருக்கிறோம். கடினமான காலங்களில் விடாமுயற்சியுடன் இருக்க பரிசுத்த ஆவியானவரால் நமக்கு பெலன் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் தேவனின் கிருபையின் காரணமாக நமக்கு அளிக்கப்பட்டது. எனவே, நாம் தேவனுக்குள் எந்த ஊழியத்தையும் செய்யத் எப்படி தகுதியுடையவர்களாகிறோம் , ஜனங்களுக்கு ஊழியம் செய்து அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுவதற்க்கு நமக்கு என்ன வாய்ப்புகள் உண்டாகிறது , எந்த வல்லமையினால் நமக்கு அளிக்கப்பட்ட ஊழியத்தை நாம் நிறைவேற்றுகிறோம் , இவையாவும் கிருபையால் நமக்கு கொடுக்கப்படுகிறது . நம்முடைய ஊழியத்தையோ, சேவையையோ , முயற்சிகளையோ குறித்து நாம் பெருமை பாராட்ட ஒன்றுமில்லை . கர்த்தருடைய மகிமைக்காகப் பயன்படுத்தப்படுவதற்கு நாம் நம்மையே அவருக்காக ஒப்புக்கொடுக்கும்போது, ​​கர்த்தருடைய வல்லமை என் பலவீனத்தில் பரிபூரணமாய் விளங்குகிறது (2 கொரிந்தியர் 12:9-11).

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள நித்திய பிதாவே, உமது நாமம் மகிமைப்படும்படி வாழ உதவிச் செய்தருளும் . என்னை மீட்டு, வரங்களை தந்து , பெலப்படுத்தி, வழிநடத்தி, எனக்கு ஊழியஞ் செய்ய எனக்கு அதிகாரம் கொடுத்த இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் . என்னுடைய வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் உமக்கு எப்பொழுதும் மகிமை கொண்டு வரும்படி இருக்க எனக்கு உதவிச் செய்தருளும் . இயேசுவின் நல்ல நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து