இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நாம் நடப்பிக்க விரும்பாத ஏதாவது காரியம் இருந்தால், அது காத்திருக்க வேண்டும். ஒருவேளை அதனால்தான் நாம் அதை நடப்பிக்க கற்றுக் கொள்வதில் தேவன்அதிக ஆர்வம் காட்டுகிறார்! கடினமான காலங்களில் பெலமுள்ளவர்களாய் இருப்பதும், கொடிய காற்று வீசும்போது விசுவாசத்திலே நிலைத்து இருப்பதிலும் இன்னும் பரிசுத்தப்படுத்திக்கொள்ள ஒன்று உள்ளது. ஆகவே, நாம் தேடுவது உண்மையில் அவருக்கானதா அல்லது வெறும் புதியதா அல்லது எளிதான காரியங்களா என்று நிதானித்து பார்க்க, தேவன் காத்திருக்கும் நேரத்தை நமக்குத் கொடுக்கிறார் .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே , நீர் அடியேனுக்காக பலமுறை காத்திருந்ததை நான் அறிவேன் - நான் என் விசுவாசத்தைக் காட்டவும், என் பாவங்களுக்காக மனந்திரும்பவும், பரிசுத்தத்தில் வளரவும், ஜெபத்தில் உம்மிடத்தில் சேரவும் , இன்னும் முதிர்ச்சியுடன் செயல்படவும், என் அன்பின் பராமரிப்பைத் திருப்பி கொடுக்க முடியாதவர்களுக்குக் கொடுக்கவும்... .எனது முடிவுகளில் நீர் உம் வழியைக் காட்டவும், என் தேவையைப் நீர் பூர்த்திசெய்யவும் , என் தனிமையில் உம் பிரசன்னத்தை வெளிப்படுத்தவும் நான் காத்திருக்கையில் எனக்கு உதவியருளும் . நான்உம்மை என் முழு மனதுடன் தேடுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.