இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சோம்பேறித்தனம் என்பது ஒரு மனநிலை மாத்திரமல்ல ; அது கிரியை இல்லாதது. முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காததும் , தேவையானவற்றைப் புறக்கணிப்பதற்கும் இது ஒரு தேர்வாகும். ஒரு காரியத்தை செய்யாமல் அதை காட்டிலும் சோம்பேறித்தனத்தை தேர்வு செய்யும்போது அதின் முடிவுகள் எப்போதும் உடனடியாகத் தெரியாது . இருப்பினும், காலப்போக்கில், அழிந்துப்போன காரியங்களின் குவியலின் அறிகுறிகள் செயலற்ற தன்மையின் முடிவுகளை மிகவும் தெளிவாக்குகின்றன. இது ஆவிக்குரிய ரீதியில் இரட்டிப்பு உண்மை. தேவனின் மக்கள் இழந்த மற்றும் உடைந்தவர்களை அணுகுவதில் சோம்பேறிகளாக இருந்ததால், எத்தனை பேர் தொலைந்து போனார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை பெரிய ராஜ்ய திட்டங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால் அவற்றை முடிப்பதற்கு நாங்கள் முயற்சி செய்யவில்லை சோம்பேறித்தனம் என்பது புறக்கணிப்பு மனப்பான்மை மாத்திரமல்ல , செயல்படாமல் இருப்பதற்கான விருப்பமும் கூட!

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் பிதாவே , உண்மை, நன்மை மற்றும் நீதியானதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் கொண்டுவாரும் . நான் இப்போது அந்த நற்க்காரியங்களைச் செய்ய முற்படும்போது தயவுசெய்து எனக்கு உதவிச் செய்யும் . அன்பான தேவனே , முக்கியமானதை நான் புறக்கணிக்கும்போது, ​​நாங்கள் வாழும் உலகில் உம்முடைய வேலையை நான் புறக்கணிக்கிறேன் என்று என் இருதயத்தை கண்டித்தருளும் . அதே சமயம், அன்பான தந்தையே, எனது பல பொறுப்புகளுக்கு இடையே எனது வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிக்கையில், சோம்பலுக்கும் எனது உண்மையான ஓய்வு தேவைக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிய எனக்கு உதவுங்கள். ஆண்டவரே, என் வாழ்க்கை, வேலை, ஓய்வு மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் உம்மை எப்பொழுதும் கனப்படுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலை கேட்கிறேன். இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து