இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் எந்த காரியத்தை அடிக்கடி பிடித்துக் கொள்கிறீர்கள்? பதட்டமான மற்றும் ஆபத்தான காலங்களில் அடிக்கடி உணரும் உங்கள் பாதுகாப்பு, உறுதிப்பாடு, நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் ஆதாரம் என்ன? மற்றவர்களை என்ன செய்ய ஊக்குவிக்கிறீர்கள், அவர்களின் பிரச்சனையின் போது யாரைப் பிடித்துக் கொள்ள ஊக்குவிக்கிறீர்கள்? கடந்த காலத்தில் அவர் நம்மை விடுவித்த மற்றும் எதிர்காலத்தில் நம்மை விடுவிக்கும் பல வழிகளுக்காக தேவனை கனப்படுத்தும் அன்பான மற்றும் பரிசுத்தமான பயத்துடன் நாங்கள் தாழ்மையுடன் பரலோகத்தின் தேவனை வணங்குகிறோம். நாம் இதைச் செய்வதற்கான ஒரே ஒரு வழி, பயபக்தியுடன் துதிப்பது, அதாவது அவருக்கு நம் இருதயத்தை ஒப்புவித்து , நம் கண்கள் கஷ்டங்களையே நோக்கி பார்க்காமல் விலகி இருக்க இவை வழிவகை செய்கிறது !

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே மற்றும் அப்பா பிதாவே , நமக்கு அறிந்த ஒருவர் சோதனைகள் மற்றும் கண்ணிகளில் அகப்பட்டிருக்கும் போது நாம் ஒவ்வொருவரும் தயவுசெய்து அவர்களோடு துணை நிற்க வேண்டும் . அவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் எங்களை எடுத்துப் பயன்படுத்துங்கள். தயவு செய்து உமது வல்லமை வாய்ந்த கரத்தால் அவர்களைத் தாங்கியருளும் . இறுதியாக, அன்பான பிதாவே , வாழ்க்கையின் புயல்களில் உம்மைப் பற்றிக்கொள்ள அவர்களை வலுப்படுத்தி, வல்லமையுள்ள அதிகாரம் அளியுங்கள். இயேசுவின் நாமத்தில், நாங்கள் உம்மை துதிக்கிறோம், உமது கிருபையைப் பெற உங்கள் சமூகத்திலே வருகிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து