இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஆஹா! இயேசுவின் வார்த்தை எத்தனை உறுதியானவை மற்றும் தீர்க்கமானவை! அவர் இந்த சவாலான வார்த்தைகளை கூறும்படி தேர்ந்தெடுத்தார், ஏனென்றால் அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைப்போல இன்று நாம் இருக்கவேண்டும் - இந்த வார்த்தைகள் உலக வரலாற்றின் பெரும்பகுதியில் அவை ஆதிக்கம் செலுத்தாது அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரமாக இருக்காது என்பதை நாம் உணர வேண்டும். சீஷத்துவம் என்பது கடினமானது மற்றும் சவாலானது ; பெரும்பாலான மக்கள் சீஷர்களாய் இருக்கின்ற விஷயங்கள் எளிமையாகவும், சிரமமின்றி இருக்க விரும்புகிறார்கள். இயேசு தம் சீஷர்கள் உள்ளடக்கியதாக பெற வேண்டிய நற்பண்புகள், பொதுவாக நமது உலகின் மேலாதிக்க கலாச்சாரங்களுக்கு சாதகமற்றவை. "எனவே, ஆயத்தமாக இரு!" இயேசு முக்கியமாக இந்த வார்த்தைகளை நமக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். "விமர்சனங்களையும் நிராகரிப்புகளையும் எதிர்கொள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள்." ஒரு சீஷராக வாழ்வது உலகத்தின் ஆண் மற்றும் பெண்களின் இருதயங்களை மாற்றுவதற்கான ஒரு கடினமான போராக இருக்கலாம் என்பதை நாம் அறிந்தாலும், பரிசுத்த ஆவியின் உதவியால், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், அவர்களை அவரிடம் நெருங்கி வரச்செய்யும் ஒரு தேவனுடைய கருவிகளாக நாம் இருக்க முடியும்! இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது அவருடைய போதனையிலும் முன்மாதிரியினாலும் அதைச் செய்யும்படி நம்மை அழைத்தார் (மத்தேயு 5:11-16). நித்திய மீட்பு எல்லா மகிமையையும் உடையதாய் இருக்கிறது அது நம் பயணத்தின் இறுதியில் நமக்குக் காத்திருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை நிராகரிப்பவர்களின் எதிர்ப்பையும் மீறி, நாம் இயேசுவை நோக்கிய பயணத்தில் நம்முடன் சேர மற்றவர்களை நாம் எப்பொழுதும் அழைக்க ஆயத்தமாக இருப்போம் என்று உறுதியேற்போம் !
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே , நாங்கள் அநேக வேளை எங்களை சுற்றியுள்ள உலகத்தின் மீது பொறுமையிழந்து, அவர்கள் உம்முடைய கிருபையின் இலக்கு என்பதை மறந்து எதிரியாக பார்க்க ஆரம்பித்தோம் என்பதற்காக எங்களை மன்னியும் . உலகத்தைப் பற்றிய எங்களது புரிதலை இயேசுவின் மூலம் மீட்டெடுப்பதற்கான எங்களுடைய ஆர்வத்துடன் சமநிலைப்படுத்த எங்களுக்கு ஞானத்தையும் தைரியத்தையும் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.